அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 12-வது ஐபில் சீசனுக்கான ஏலம் இன்று ஜெய்ப்பூரில் 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர், இப்பட்டியலில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் ஏலத்திற்கு தொடர்புடைய 10 விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்:


1. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளும் அடுத்த சீசனுக்காக (2019) தங்களுடைய 124 வீரர்களைத் திரும்பப் பெற்றுள்ளனர், அதாவது அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 71 வீரர்கள் அணிக்கு வெளியே உள்ளனர்.


2. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஏலத்தில் 346 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 70 பேர் மட்டுமே வாங்கப்படுவார்கள்.


3. ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு அணியும் குறைந்தது 18 வீரர்கள் இருக்க வேண்டும். இதேபோல ஒரு அணியில் அதிகபட்சமாக 25 வீரர்கள் மட்டுமே இருக்க முடியும்.


4. ஐ.பி.எல். போட்டியின் தற்போதைய சாம்பியன் சென்னை சூப்பர் கிங் அணி 23 வீரர்களை தக்க வைத்துள்ளது. இரண்டு வீரர்களை மட்டும் வாங்க முடியும். மும்பை இந்தியன்ஸ் 18 வீரர்களையும், சன்ரைஸ் ஐதராபாத்தில் 17 வீரர்களையும் தக்க வைத்துள்ளனர்.


5. தற்போதைய அணியில் குறைந்தபட்சம் ஒன்பது வீரர்கள் கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஸிடம் 13 வீரர்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் 14 வீரர்களும் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 16 வீரர்கள் உள்ளனர்.


6. ஒரு அணி ரூ.82 கோடி வரை மட்டும் ஏலத்திற்கு பயன்படுத்த முடியும். ஒவ்வொரு அணியும் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதன் அடிப்படையில், ஒவ்வொரு அணிக்கும் ஒரு தனி தொகை இருக்கிறது. கிங்ஸ் XI பஞ்சாபில் அதிகபட்சமாக 36.2 கோடியாகும். இதன் பிறகு, ரூ. 25.5 கோடி டெல்லி அணியுடன் உள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் இந்த தொடரில் தனது பெயரை டெல்லி கேபிடல் என மாற்றியுள்ளது. 


7. ஒரு வருடத்தில் ஐபிஎல் தொடரின் ஏலம் இரண்டாவது முறையாக நடக்கிறது. முதலில் கடந்த ஜனவரி மாதத்தில் ஏலமிடப்பட்டது. தற்போது ஏலத்தில் பங்கேற்க எட்டு அணிகளிடம் ஏலத்தொகை ரூ.145 கோடிகள் 25 லட்சம் உள்ளன.


8. ஐசிசி உலகக் கோப்பை அடுத்த ஆண்டு மே 30 முதல் தொடங்க உள்ளது. எனவே ஐபிஎல் தொடர் இம்முறை முன்னரே ஆரம்பிக்கலாம். ஆனால் ஐபிஎல் தொடருக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஐபிஎல் அடுத்த வருடம் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது. 


9. ஐசிசி தொடருக்கான ஏலத்தில் அதிக வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கலந்துக்கொண்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 59 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இது தவிர ஆஸ்திரேலியாவில் 35, மேற்கிந்திய தீவுகளில் இருந்து 33, ஸ்ரீலங்காவில் 28, ஆப்கானிஸ்தானில் 27, நியூசிலாந்தில் 17, இங்கிலாந்தில் 14, பங்களாதேஷ் வீரர்கள் 10 என்ற கணக்கில் ஏலத்தில் பங்கேற்று உள்ளனர். அமெரிக்கா, ஹாங்காங் மற்றும் அயர்லாந்தை சேர்ந்த ஒவ்வொரு வீரரும் இந்த ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


10. இந்த ஏலத்தில் சாம் கரேன், பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட 9 வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடி ஆகும். 1.5 கோடியை அடிப்படையாகக் கொண்ட வீரர்களின் பட்டியலில் 10 வீரர்கள் உள்ளனர். யுவராஜ் சிங் உட்பட 19 வீரர்கள் 10 மில்லியன் ரூபாய் அடிப்படை விலைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரூ. 75 லட்சம் அடிப்படை விலையில் இரண்டு இந்தியர்கள் உட்பட 18 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க போகிறது. இதுதவிர ரூ. 50 லட்சம் அடிப்படை விலையில் 62 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர்.