புது டெல்லி: 2020 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மேல் தான் அதிக ஆர்வம் காட்டப்பட்டது. மொத்தத்தில் 997 பிளேயர்கள் ஐபிஎல் 2020 தொடர்காக பதிவு செய்திருந்தனர். இந்த வருட ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த தொடருக்கு அதிக வீரர்களை ஏலத்தில் எடுத்த அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடம் வகிக்கிறது. அந்த அணி மொத்தம் 11 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. சென்னை அணி நான்கு வீரர்களை ஏலம் எடுத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எட்டு அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரங்கள்:-


சென்னை சூப்பர் கிங்ஸ்: சாம் குர்ரன், பியூஷ் சாவ்லா, ஜோஷ் ஹேசில்வுட், ஆர் சாய் கிஷோர், 


மும்பை இந்தியன்ஸ்: கிறிஸ் லின், நாதன் கூல்டர்-நைல், சவுரப் திவாரி, மொஹ்சின் கான், திக்விஜய் தேஷ்முக், பல்வந்த் ராய் சிங், 


ராஜஸ்தான் ராயல்ஸ்: ராபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனட்கட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, டேவிட் மில்லர், அனிருதா ஜோஷி, ஓஷேன் தாமஸ், டாம் குர்ரன், ஆண்ட்ரூ டை,


டெல்லி கேப்பிடல்ஸ்: ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் கேரி, ஷிம்ரான் ஹெட்மியர், மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, லலித் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், 


கிங்ஸ் லெவன் பஞ்சாப்: க்ளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் கோட்ரெல், தீபக் ஹூடா, இஷான் பொரல், ரவி பிஷ்னோய், ஜிம்மி நீஷம், கிறிஸ் ஜோர்டான், தாஜிந்தர் தில்லான், பிரப்சிம்ரன் சிங்,


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பிரியாம் கார்க், விராட் சிங், மிட்செல் மார்ஷ், சந்தீப் பவானகா, ஃபேபியன் ஆலன், அப்துல் சமத், 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஈயோன் மோர்கன், பாட் கம்மின்ஸ், ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி, எம் சித்தார்த், கிறிஸ் கிரீன், டாம் பான்டன், பிரவீன் தம்பே, நிகில் நாயக், 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், ஜோசுவா பிலிப், கேன் ரிச்சர்ட்சன், பவன் தேஷ்பாண்டே, இசுரு உதனா, ஷாபாஸ் அஹமட், டேல் ஸ்டெய்ன்,


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.