சென்னை சேப்பாக்கத்தில் வரும் 23-ம் தேதி நடைபெறும் 12-வது ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் , பெங்களூரு ராயல்ஸ் அணிகள் இடையிலான  முதல் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12-வது ஐபிஎல் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.


ஏப்ரல் 5-ம் தேதி வரை இரண்டு வரை காலத்துக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஐ.பி.எல். முழு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.


சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் டிக்கெட் விற்பனையாகும். காலை 11.30 மணிக்கு டிக்கெட் வினியோகம் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை டிக்கெட்டுகள் விற்கப்படும். 


இந்தப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 சி,டி மற்றும் இ ஸ்டாண்டில் கீழ் பகுதிக்கான இந்த விலையிலான டிக்கெட்டுகள் விக்டோரியா சாலையில் உள்ள 6 நம்பர் பூத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ரூ.2,500 , ரூ.5 ஆயிரம், ரூ.6,500 ஆகிய விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.


இதேபோல புக்மை ஷோ (in.bookmyshow.com) என்ற இணைய தளத்திலும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறும். குறைந்த விலையான ரூ.1,300க்கான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே கிடைக்கும்.