ஆர்சிபி கோட்டையில் ஆதிக்கம் செலுத்தும் கேகேஆர்! இன்றும் கொல்கத்தா வெற்றி பெறுமாம்!
IPL Match Prediction - RCB vs KKR Match 10, IPL 2024: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மல்லுக்ககட்ட இருக்கிறது. இப்போட்டியில் யார் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என பார்க்கலாம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மார்ச் 29, வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 10வது லீக் போட்டியில் மோத உள்ளன. இந்த சீசன் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கேயிடம் தோல்வியடைந்த RCB, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. அந்த போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 77 ரன்கள் குவித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியதால் பெங்களூரு அணிக்கு வெற்றி கிடைத்தது.
இதேபோல் KKR அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் விளாசி பிரம்மிக்க வைத்தார். அவர் அடித்த ஒவ்வொரு சிக்சரும் மெகா சிக்சராகவே மாறியது. பந்துவீச்சிலும் ரஸ்ஸல் சிறப்பாக செயல்பட்ட நிலையில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த சூழலில் தான் இரு அணிகளும் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் அடுத்த போட்டிக்காக மல்லுக்காட்ட தயாராக உள்ளன. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் 200 ரன்கள் அடிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. இரு அணிகளிலும் பேட்டிங் சூரர்கள் இருப்பதால் அதிரடி காட்சிகளை பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் இன்றும் எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில் பவுலர்களுக்கு தலைவலியும் காத்திருக்கிறது.
மேலும் படிக்க | டெல்லிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!
நேருக்கு நேர் இதுவரை
ஆர்சிபி, கேகே ஆர் அணிகள் இதுவரை நேருக்கு நேர் 32 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் ஆர்சிபி அணி 14 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் சுவாரஸ்யமாக கடைசியாக இரு அணிகளும் பெங்களூருவில் சந்தித்துக் கொண்ட 5 போட்டிகளிலும் கேகேஆர் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த ஆதிக்கத்தை இன்றும் கொல்கத்தா அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) பிளேயிங் லெவன்:
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (கீப்பர்), மயங்க், அல்சாரி ஜோசப், முகமது சிராஜ், யாஷ் தயாள், இம்பாக்ட் பிளேயர் - மஹிபால் லோம்ரோர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR):
ஃபில் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ராமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, இம்பாக்ட் பிளேயர் - சுயாஷ் சர்மா
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
ஆர்சிபி அணியில் பேட்டிங் விராட் கோலி நம்பிக்கை கொடுக்கிறார். சேஸிங் என்றால் தினேஷ் கார்த்திகை நம்பிக்கை வைக்கலாம். பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஆர்சிபி அணியில் பார்க்க முடியவில்லை. சுழற்பந்துவீச்சு அந்த அணியில் இல்லை. ஆனால் கேகேஆர் அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சரிநிகராக இருக்கிறது. இதனை கருத்தில் கொள்ளும்போது கேகேஆர் அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை கேகேஆர் அணியின் இந்த பலத்தை சமாளித்தால் மட்டுமே ஆர்சிபி அணிக்கு வெற்றி வாய்ப்பு.
மேலும் படிக்க | மும்பை அணிக்கு மேலும் பின்னடைவு! என்ன செய்ய போகிறார் ஹர்திக் பாண்டியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ