இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!
IPL 2025 : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2025 Mega Auction Updates : ஐபிஎல் 2025க்கு முன் மெகா ஏலம் நடக்கவுள்ளது, இதில் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ரூபாய் மழை பொழியப்போகிறது. அதில் நம்முடைய கணிப்பின்படி இடம்பிடித்துள்ள மூன்று பிளேயர்கள் பட்டியலை பார்க்கலாம். அவர்கள் இப்போது இருக்கும் அணியை விட்டு வெளியேறினாலோ அல்லது அந்த அணியே அவர்களை விடுவித்தாலோ அந்த மூன்று பிளேயர்களுக்கு பெரிய ஜாக்பாட் தான். கடந்த ஐபிஎல் போட்டியில் அதிக தொகைக்கு சென்ற மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோரின் விலைகளை விட இவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரோஹித் சர்மா
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ரோகித் சர்மா. இவரது தலைமயில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற நிலையில் கடந்த ஆண்டு திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து அவசர அவசரமாக நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருக்கும் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறும் முடிவில் இருக்கிறார். அவர் மட்டும் ஏலத்துக்கு வந்தால் நிச்சயம் ரோகித் சர்மாவை தங்கள் அணிக்கு எடுக்க எல்லா அணி உரிமையாளர்களும் போட்டி போடுவார்கள்.
மேலும் படிக்க | ரிஷப் பந்த் இடத்தை இந்திய அணியில் பிடிக்கப்போகும் 3 விக்கெட் கீப்பர்கள்...!
அபிஷேக் சர்மா
ஐபிஎல் 2024ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா, பேட்டிங்கில் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். அவருக்கும் இந்த முறை ஏலத்தில் அதிக தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இவரை சன்ரைசர்ஸ் அணி ரீட்டெயின் செய்ய அதிக வாய்ப்புகள் இருந்தாலும் அந்த அணி கொடுக்கும் தொகையை விட ஏலத்தில் கூடுதல் தொகை கிடைக்கும். எனவே அபிஷேக் சர்மா ஏலத்துக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜாக் ஃப்ரேசர் மெக்குர்க்
ஐபிஎல் 2024ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய இளம் பேட்ஸ்மேன் ஜாக் ஃப்ரேசர் மெக்குர்க், அதிரடியில் புதிய கிங்காகிக் கொண்டிருக்கிறார். இவர் ஆட்டத்தை அனைத்து ஐபிஎல் அணிகளுமே பார்த்துவிட்டதால், மெக்குர்க் ஏலத்துக்கு வர வேண்டும் என பல அணிகள் எதிர்பார்க்கின்றன. டெல்லி அணி மட்டும் இவரை ரீட்டெயின் செய்யாமல் விட்டால், மெக்குர்க்கை ஏலம் எடுக்க ஐபிஎல் மெகா ஏலத்தில் செம போட்டி இருக்கும்.
மேலும் படிக்க | இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் புது அப்டேட் - சாம்பியன்ஸ் டிராபியில் 2 முறை மோதல்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r