வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த கான்வே - ருதுராஜ் ஜோடி தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவிக்க தொடங்கியது. கான்வே தொடக்கத்தில் பவுண்டரிகளை குவிக்க, ருதுராஜ் நிதானம் காட்டினார். 6 ஓவர்களில் இந்த ஜோடி 52 ரன்களை குவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10 ஆவது ஓவர் வரை நிதானம் காட்டிய ருதுராஜ், அக்சர் படேல் வீசிய அந்த ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்து தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். மேலும், குல்தீப் வீசிய 12ஆவது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். கான்வேவும் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். நன்றாக விளையாடி வந்த இந்த ஜோடி சக்காரியா வீசிய 15ஆவது ஓவரில் பிரிந்தது. கெய்க்வாட் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 50 பந்துகளில் 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 


மேலும் படிக்க | பிளேயிங் லெவனில் மாற்றமே இருக்காது... தோனி சொன்ன காரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!


இதையடுத்து, துபே களமிறங்கி கான்வேவுக்கு துணை நின்றார். கான்வே தொடர்ந்து அதிரடி காட்டினார். கலீல் அகமது வீசிய 18ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து தூபே மிரட்டினார். இருப்பினும் அந்த ஓவரிலேயே தூபே 9 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கான்வே 52 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 87 ரன்களை எடுத்தார். இதையடுத்து, கடைசி ஓவரில் ஜடேஜாவின் அதிரடியில் 16 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால், 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களை குவித்தது.


மிக கடினமான இலக்கை சிஎஸ்கே நிர்ணயித்துவிட்ட நிலையில், அதனை சேஸ் செய்யும் முனைப்பில் களமிறங்கியது டெல்லி அணி. இந்த ஐபிஎல் போட்டி அந்த அணிக்கு சாதகமாக அமையவில்லை என்பது இந்த போட்டியிலும் கண்கூடாக தெரிந்தது. கேப்டன் டேவிட் வார்னரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று ஆடவில்லை. பிரித்திவி ஷா, பிலிப் ஷால்ட், ரோசோவ் ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறிவிட்டனர். ஆனால் மறுமுனையில் அரைசதம் அடித்த வார்னர் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார். 


இருப்பினும் பலனளிக்கவில்லை. முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அபார வெற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றுக்கு அதிக முறை தகுதி பெற்ற அணி என்ற வரலாற்றையும் தோனி படை படைத்திருக்கிறது.


மேலும் படிக்க | DC vs CSK: வாணவேடிக்கை காட்டிய ஓப்பனர்கள்... இமாலய இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ