Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore: ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் இன்று (ஏப்ரல் 6) இரவு ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. முதல் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியும், முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த கொல்கத்தா அணியும் மோதுவதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், சிக்ஸர், பவுண்டரிகள் அதிகமாக விளாசலாம். இன்றைய ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்திலும் பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேகேஆர் மற்றும் ஆர்சிபி போட்டி விவரங்கள்
- ஐபிஎல் 2023: 9வது போட்டி லீக் ஆட்டம்
- மோதும் அணிகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
- போட்டி நடக்கும் இடம்: ஈடன் கார்டன்ஸ் மைதானம், கொல்கத்தா
- போட்டி நடக்கும் நாள்: வியாழன், ஏப்ரல் 6.
- போட்டி நடைபெறும் நேரம்: இரவு 7:30 மணிக்கு 
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா


ஈடன் கார்டன் மைதானத்தின் நிலவரம்
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள ஆடுகளம் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கிற்கு ஏற்ற மேற்பரப்பை கொண்டுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் மொத்தம் 12 டி20 போட்டிகளில் விளையாடி, இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளன. வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த 201/5 ரன்களே இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 174 ஆக இருப்பதால், இன்றைய போட்டியில் அதிக ஸ்கோர்கள் அடிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். கடந்த கால போட்டிகளை மினதில் வைத்து, டாஸில் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.


மேலும் படிக்க: ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் சேனல் லிஸ்ட் மற்றும் ஆன்லைனில் போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?


வெற்றியின் பயணத்தை தொடருமா ஆர்சிபி
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது வெற்றி பயணத்தை தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு (KKR) எதிரான இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) வெற்றியின் பயணத்தை தொடரும்.


வெற்றி பெற வேண்டும் கட்டாயத்தில் கேகேஆர்
தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணி டிஎல்எஸ் முறையில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்டுகளை வீழ்த்த, பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆட்டத்தில் மழை குறுக்கிட கொல்கத்தா 16 ஓவர்களில் 146/7 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.


மேலும் படிக்க: சிக்ஸ் அடித்து போட்டியை முடித்த விராட்... 11 ஆண்டுகளாக தொடரும் மும்பையின் சாபம்


கொல்கத்தா அணியில் களம் இறங்கும் 11 வீரர் (கணிப்பு)
ஆர்கே சிங், என் ராணா (கேப்டன்), விஆர் ஐயர், ஏஎஸ் ராய், ஏடி ரஸ்ஸல், எஸ்பி நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், டிம் சவுத்தி, வருண் சக்ரவர்த்தி, யுடி யாதவ்


பெங்களூர் அணியில் களம் இறங்கும் 11 வீரர் (கணிப்பு)
பாஃப் டு பிளெசீ (கேப்டன்), விராட் கோலி, மைக்கேல் பிரேஸ்வெல், ஜிஜே க்ஸ்வெல், டிஜே ல்லி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆகாஷ் தீப், முகமது சிராஜ், எச்வி படேல், கேவி சர்மா.


மேலும் படிக்க: கடைசி ஓவர் வரை பரபரப்பு... பஞ்சாப் வெற்றி - புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் சரிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ