இன்று நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டித்தொடரில் 18 போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக இருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து களம் இறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது, இந்த வெற்றியுடன் சேர்த்து, ஐபிஎல் 2023 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அனி.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் 18வது போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (பிசிஏ) ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்றார். குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்யக் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.


மேலும் படிக்க | தோஹா டயமண்ட் லீக்கில் சாதிக்கக் காத்திருக்கும் நீரஜ் சோப்ரா! தோஹா போட்டிகளில் ஒலிம்பிக் சாம்பியன்


தந்திரமான மேற்பரப்பில் முதலில் பந்து வீச தயங்காத குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்றைய நாள் சாதகமாக இருந்தது. பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசையில் ஐந்து வீரர்கள் நல்ல ஃபார்மில் இருந்தாலும், பெரிய அளவில் ரன் ஏதும் எடுக்கவில்லை. பஞ்சாப் அணியில் மேத்யூ 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.


3 வருட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல்லில் தனது முதல் ஆட்டத்தை விளையாடிய மோஹித் ஷர்மா, தனது 4 ஓவர்களில் வெறும் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


ரஷித் கான் மற்றொரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


மேலும் படிக்க: 'இது முத்துப்பாண்டி கோட்டை' இன்று சிஎஸ்கே ஜெயிக்கவே அதிக வாய்ப்பு... எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ