ஐபிஎல் 2023: தமிழ் பாடலுக்கு நடனமாடிய தமன்னா - ராஷ்மிகா: பிரம்மாண்டமாக தொடங்கியது
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா மிக பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கண்கவர் வாணவேடிக்கைகளுக்கு இடையே உற்சாகமாக நடனமாடினர்.
தமன்னாவின் நடனம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா கண்கவர் வாணவேடிக்கைகளுடன் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகைகளான தமன்னா பாட்டியா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடனமாடினர். அர்ஜித் சிங்கின் இசைக் கச்சேரியைத் தொடர்ந்து ஆடிய தமன்னா பாட்டியா தமிழ் பாடலான டும் டும் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இந்த பாடல் விஷால் நடித்த எனிமி படத்தில் இடம்பெற்ற பாடல். மேலும், ஊ சொல்றியா மாமா பாடலுக்கும் அவர் நடமாடி கலக்கினார். தமன்னாவைத் தொடர்ந்து நடனமாட வந்தார் ராஷ்மிகா. அவர் வந்ததுமே அகமதாபாத் மைதானம் ரசிகர்களின் கோஷம் விண்ணை பிளந்தது.
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆடிய ராஷ்மிகா
ராஷ்மிகா தன்னுடைய டிரேட் மார்க் டான்ஸ் பாடலான சாமி பாடலுக்கு நடமாடினார். அந்தப் பாடலைத் தொடர்ந்து அண்மையில் ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினார். இந்த பாடலுக்கு ராஷ்மிகா நடமாடியபோது அகமதாபாத் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
கேப்டன்கள் அறிமுகம்
கலைநிகழ்ச்சிகளுக்குப் பிறகு முதல் போட்டியில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இருவரும் தங்களது அணிகளின் லோகோ அலங்கரிப்பட்ட ரதத்தில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் ஐபிஎல் கோப்பையுடன் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.
டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா
சரியாக 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. ஹர்திக் பாண்டியா காயினை சுண்டிவிட, தோனி ஹெட் என கேட்டார். ஆனால் விழுந்தது டெய்ல்ஸ். இதனால் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்ததாக அறிவித்தார். இரண்டாவது பேட்டிங்கிற்கு உகந்த மைதானம் என்பதால் அவர் பவுலிங் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் பேட்டிங் இறங்கியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ