ஐபிஎல் 2023 புள்ளி பட்டியல்: சறுக்கிய ஆர்சிபி... டாப் 4-ல் சென்னை இல்லை
IPL 2023 Points Table: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 இடங்கள் முன்னேறியது. ஆரஞ்சு தொப்பி பந்தயத்தில் தவான் முன்னிலை வகிக்கிறார், சாஹல் தொடர்ந்து ஊதா நிற தொப்பியைத் தக்க வைத்துள்ளார்.
ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணை: இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரில் தினமும் பரபரப்பான போட்டிகள் விளையாடப்படுகின்றன. அவற்றின் முடிவுகள் காரணமாக, புள்ளிகள் அட்டவணையிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 2 புள்ளிகளைப் பெற்றது.
ஐபிஎல் 2023-ல் ஹைதராபாத் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த அணி 2 போட்டிகளில் தொடர்ந்து 2 தோல்விகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், மார்க்ராம் தலைமையில் அந்த அணி தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணியை தோற்கடித்த பிறகு ரன் ரேட் -0.822 மற்றும் 4 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியது. அதே சமயம் ஆர்சிபி அணி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? பெங்களூருக்கு சான்ஸ் அதிகம்
ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை அணியின் நிலை என்ன?
சென்னை அணியை பொறுத்தவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றி மற்றும் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. நான்கு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன்ரேட் +0.225 ஆக உள்ளது.
நான்காவது இடத்தில் கொல்கத்தா:
அதே சமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரிய அளவில் சரிவை சந்திக்கவில்லை. போட்டிக்கு முன்பும் அண்ட்அந்த அணி நான்காவது இடத்தில் இருந்தது. போட்டிக்குப் பிறகும் அதே இடத்தில் கொல்கத்தா அணி உள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை அவர்களின் நெட் ரன்ரேட்டில் சிறிது மாற்றம் இருந்தாலும். கொல்கத்தா அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: தோனி - சச்சின் மாதிரி நினைச்சுக்காதீங்க - சேவாக் காட்டம்
ஐபிஎல் 2023 புள்ளி பட்டியல்: முதல் நான்கு அணிகள் விவரம்:
இந்தியன் பிரீமியர் லீக் 2023 இன் புள்ளிகள் அட்டவணையின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் தற்போது முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று அணிகளும் 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ராஜஸ்தானின் நிகர ரன்ரேட் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
ஹைதராபாத் Vs கொல்கத்தா மேட்ச் நிலவரம்:
நேற்றைய போட்டியில் ஸ் வென்ற கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய போது, கொல்கத்தா அணியால் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க: கொல்கத்தாவை இந்த முறை காக்க தவறினார் ரிங்கு சிங்... ஹைதராபாத் வெற்றி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ