IPL 2023 SRH vs KKR: நடப்பு ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹார் ப்ரூக்ஸ் சதம்


டாஸ் வென்று பந்துவீசிய கொல்கத்தா அணிக்கு, ஹைதராபாத் அணியின் ஹாரி ப்ரூக்ஸ் சற்று தலைவலியை கொடுத்தார். அவர் முதல் 31 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், அடுத்து விரைவாக தனது சதத்தையும் குவித்தார். ஹாரி ப்ரூக்ஸ் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உடன் 100 (55) ரன்களை குவிக்க, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 228 ரன்களை குவித்தது. கேப்டன் மார்க்ரம் 50 (26), அபிஷேக் சர்மா 32(17), கிளேசன் கடைசி நேரத்தில் 16(6) ரன்களையும் குவித்தனர். 


சொதப்பிய ஓப்பனிங்


இதையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சற்று சுமாராகவே அமைந்தது. குர்பாஸ் 0, வெங்கடேஷ் ஐயர் 10, சுனில் நரைன் 0 என பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். சற்று நேரம் தாக்குபிடித்த ஜெகதீசன் 36(21) ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் கேப்டன் நிதிஷ் ராணா அதிரடி காட்டினாலும், அடுத்து வந்த ரஸ்ஸல் 3(6) ரன்களில் நடையைக்கட்டினார்.  


மேலும் படிக்க | GTvsPBKS: ஜெயிச்ச பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் வச்ச ஆப்பு... ரூ.12 லட்சம் போச்சு..!


நிதிஷ் வெறியாட்டம்


அதன்பின்னர் தான், கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ரிங்கு சிங் களம் புகுந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் நிதிஷ் தனது அதிரடியை தொடர்ந்தார். அரைசதம் கடந்தும் அவர் இலக்கை நோக்கி ஸ்கோரை எடுத்துச்செல்ல ஆர்வமாக இருந்தார். உம்ரான் மாலிக்கின் ஓவரில் 28 ரன்களை குவித்து நிதிஷ் ஹைதராபாத்தை கலக்கமடைய செய்தார்.  


நடராஜனின் கட்டுக்கோப்பு


இந்த ஜோடி 31 பந்துகளில் 69 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து ஷர்துல் தாக்கூர் களம் புகுந்தவுடன் ரிங்கு சிங் தனது அதிரடியை தொடங்கினார். ஆட்டத்தை சென்ற போட்டியை போன்று கடைசி வரை இட்டுச்செல்வார் என எதிர்பார்த்த நிலையில், 19ஆவது ஓவரை நடராஜன் கட்டுக்கோப்புடன் வீசி அதனை கடினமாக்கினார். 



கட்டுப்படுத்திய உம்ரான்


இதனால், கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஓவரில் 28 ரன்களை கொடுத்த உம்ரான், தனது இரண்டாவது ஓவரை வீச வந்தார். முதல் பந்திலேயே ஷர்துல் ஆட்டமிழக்க, போட்டி ஹைதராபாத் பக்கம் திரும்பியது. ரிங்கு சிங்கால் அந்த ஓவரில் ஒரே சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது. அதன்படி, ஹைதராபாத் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, கொல்கத்தா அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக ஹாரி ப்ரூக்ஸ் தேர்வானார். 



7ஆவது இடத்தில் SRH


கொல்கத்தாவில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 75(41), ரிங்கு சிங் 58(31) ரன்களை எடுத்தனர். யான்சன், மார்க்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும், இந்த வெற்றி மூலம், ஹைதராபாத் 7ஆவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா தோல்வியடைந்தாலும் அதே நான்காவது இடத்தில் நீடிக்கிறது. 


மேலும் படிக்க | குஜராத்-பஞ்சாப் போட்டியில் 8 பெரிய சாதனைகளை செய்த ஷுப்மான் கில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ