ஆர்சிபி - லக்னோ போட்டி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி மிகவும் காரசாரமாக முடிவுற்றது. விராட் கோலி - காம்பீர், நவீன் உல்ஹக் இடையே உருவான வாக்குவாதம் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் லக்னோ வென்றபோது, சின்னசாமி மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்குமாறு காம்பீர் கூறியதும், வெற்றிக்குப் பிறகு நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் செய்த சமிக்கைகள் ஆர்சிபி அணிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.


பழிதீர்த்த ஆர்சிபி 


சொந்த மைதானத்தில் ரசிகர்களுக்கு முன்பாக ஆர்சிபி அணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் லக்னோ அணியினர் நடந்து கொண்டது ஆறாத வடுவாக இருந்த நிலையில், லக்னோ அணியின் சொந்த மைதானமான லக்னோவில் அந்த அணியை தோற்கடித்து அதற்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தது ராயல் சேலஞ்சர் பெங்களுரு அணி. குறைவான ஸ்கோர் அடித்திருந்தாலும், அந்த இலக்கை கூட அடிக்க விடாமல் லக்னோ அணியை தோற்கடித்தது ஆர்சிபி. இதனால் வெற்றியை வெகு உற்சாகமாக கொண்டாடினார் விராட் கோலி. 


மேலும் படிக்க | Virat vs Gambhir Fight: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோலி - கம்பீர்! பரபரப்பான சண்டை காட்சி!


காம்பீர் - விராட் வாக்குவாதம்


இது லக்னோ அணியினருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. ஏற்கனவே விராட் கோலியுடன் ஏழாம் பொருத்தத்தில் இருக்கும் கவுதம் காம்பீருக்கு விராட் கோலியின் ஒவ்வொரு கொண்டாட்டமும் உச்சகட்ட கடுப்பை வரவழைத்தது. இருப்பினும் எப்படி காட்டுவது என வழிதேடிக்கொண்டிருந்த அவருக்கு கைல் மெயர்ஸ் கிடைத்தார். விராட் கோலியுடன் மேயர்ஸ் பேசிக் கொண்டிருந்தபோது அவரை அழைத்த காம்பீர், விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார். அவருடன் நவீன் உல் ஹக்கும் சேர்ந்து கொண்டார். இருவருக்கும் தக்க பதிலடியை கொடுத்தார் விராட் கோலி. 


சோஷியல் மீடியா பதிவு 


களத்துடன் இந்த மோதல் நின்றிருந்தால் பரவாயில்லை நவீன் உல்ஹக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலியுடனான மோதல் குறித்து மறைமுகமாக சாடும் வகையில் ஒரு பதிவை போட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி, உங்களால் கொடுக்க முடியும் என்றால், அதனை திரும்பி பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் முதலில் கொடுக்காதீர்கள் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றி மிகவும் அழகானது இனிப்பானது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 


இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. சொந்த மண்ணை விட இங்கு எங்களுக்கு அதிக ரசிகர்கள் கூடியிருந்தனர். இதனால் ரசிகர்கள் எங்களை எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய தினேஷ் கார்த்திக் இப்படித்தான் நாங்கள் தைரியமாக விளையாடுவோம் என கூறியுள்ளார். 


மேலும் படிக்க | IPL 2023 | GT vs DC: ஐபிஎல் கோப்பை கனவை தக்க வைக்குமா? சிக்கலில் டெல்லி அணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ