IPL 2023 MI vs GT: நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. பிளேஆப் சுற்று ரேஸில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் குஜராத் அணி, இந்த போட்டியில் வெல்வதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்ய வாய்ப்புள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முரட்டு பார்மில் குஜராத்


அந்த அணி தற்போது 11 போட்டிகளில் 8இல் வென்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்களான சாஹா, சுப்மன் கில் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். மிடில் ஆர்டரில் கேப்டன் பாண்டியா, மில்லர், அபினவ் மனோகர், விஜய் சங்கர், பினிஷிங் செய்ய தேவாட்டியா, ரஷித் கான் ஆகியோர் என பேட்டிங் முரட்டுத்தனமான பார்மில் இருக்கிறது. 


மேலும் படிக்க | செம ஃபார்மில் இருக்கிறாங்க...இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள்: சுரேஷ் ரெய்னா


மோகித் ஷர்மாவின் வருகை


பந்துவீச்சிலும் ஷமி, ரஷித் கான் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியதாக உள்ளது. தற்போது மோகித் ஷர்மா அவர்களின் மீட்பராக செயல்படுகிறார். இன்றைய போட்டியில் அல்ஸாரி ஜோசப் அல்லது யாஷ் தயால் என கூடுதல் வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்க குஜராத் திட்டமிடலாம். 


சூர்யகுமாரின் எழுச்சி


மும்பை அணியை பொருத்தமட்டில் தற்போது நான்காவது இடத்தில் இருந்தாலும், இந்த போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டியது முக்கியமாக உள்ளது. சூர்யகுமார் யாதவின் எழுச்சி தற்போது அந்த அணிக்கு புத்துயிர்ப்பை அளித்துள்ளது எனலாம். 


தலைவலி கொடுக்கும் ரோஹித் 


திலக் வர்மா, வதேரா உள்ளிட்ட இளம் வீரர்களுடன் இஷான் கிஷான் ஓப்பனிங்கில் சிறப்பாக செயல்பட்டால் இன்றைய போட்டியில் டஃப் கொடுக்கலாம். ஆனால், ரோஹித்தின் தொடர் சொதப்பலான ஆட்டம் மும்பைக்கு கூடுதல் தலைவலி தான். அவர் இன்றைய போட்டியில் தனது பார்மை மீட்டுவருவது அணிக்கு வலு சேர்க்கும். மேலும், அவருக்கு இன்று ஓய்வளிக்கப்பட வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பந்துவீச்சிலும் மும்பை அணி தற்போது பலவீனமாக காணப்படுகிறது. 


இன்றைய போட்டியில், மும்பை அணி வெற்றி பெறும்பட்சத்தில் அது பெங்களூரு, லக்னோ, பஞ்சாப் அணிக்கு பலத்த அடி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இன்றைய போட்டியை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 


மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா(கேப்டன்), எஸ்ஏ யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, சி கிரீன், பியூஷ் சாவ்லா, இஷான் கிஷன்(கீப்பர்), ஜேபி பெஹ்ரன்டோர்ஃப், கே கார்த்திகேயா, ஆகாஷ் மண்ட்வால், சிஜே ஜோர்டான்


குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில், எச்.எச்.பாண்டியா(கேப்டன்), ஏ மனோகர், டி.ஏ.மில்லர், விஜய் சங்கர், ஆர். தெவாடியா, விருத்திமான் சாஹா(கீப்பர்), ரஷித் கான், எம். ஷமி, எம்.எம்.சர்மா, நூர் அகமது


மேலும் படிக்க | விராட் கோலி இடம் எனக்கு வேண்டும் - ரோகித் சர்மாவிடம் நேரடியாக கேட்ட இளம் வீரர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ