IPL 2023 Injury Players List: ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதும் இந்த தொடர் வரும் மே மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும் இந்த தொடர் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகி வரும் நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட்டு விற்பனையைும் தொடங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடரை முன்னிட்டு அனைத்து வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்வேறு வெளிநாட்டு வீர்ரகள் தற்போது இந்தியா திரும்பி தங்கள் அணிகளுடன் இணைந்து வருகின்றனர். இந்த ஆண்டு, ஒவ்வொரு அணியிலும் பல வீரர்கள் காயமடைந்திருப்பார்கள், குறிப்பிட்ட வீரர்களை நம்பியே ஆட்டத்தில் களமிறங்க வேண்டிய சூழலில் சில அணிகள் உள்ளன. 


மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கேவின் துருப்புச் சீட்டு இவர் தான்..! மற்ற அணிகளுக்கு கிலி காட்டப்போகிறார்


மும்பை அணியில் பும்ரா, டெல்லியில் பண்ட், கொல்கத்தாவில் ஷ்ரேயஸ் ஐயர் என முக்கிய வீரர்கள் காயமடைந்து ஐபிஎல் தொடரை தவறவிட்டுள்ளனர். இதனால், அந்த அணியில் வேறு வீரர்கள் அவர்களின் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். டெல்லியின் கேப்டனான ரிஷப் பண்டிற்கு பதில் டேவிட் வார்னர் அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டாலும், பிளேயிங் லெவனில் ஒரு தேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டருக்கான திண்டாட்டத்தில் அந்த அணி உள்ளது எனலாம். கொல்கத்தா அணி விரைவில் தங்களின் கேப்டனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், இதுவரை ஐபிஎல் அணிகளில் காயமடைந்திருப்பவர்கள், தொடரில் பங்கேற்பதில் சந்தேகத்தில் இருக்கும் வீரர்கள் ஆகியோரின் பட்டியலை இங்கு அணி வாரியாக காணலாம்.


சென்னை சூப்பர் கிங்ஸ்: கைல் ஜேமீசன், முகேஷ் சௌத்ரி
மும்பை இந்தியன்ஸ்: பும்ரா, ஜே ரிச்சர்ட்சன்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: வில் ஜாக்ஸ், ராஜத் பட்டீதர், ஜோஷ் ஹேசல்வுட்.
டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பண்ட்  
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷ்ரேயஸ் ஐயர். 
பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ். 
ராஜஸ்தான் ராயல்ஸ்: பிரசித் கிருஷ்ணா. 
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: மோஷின் கான். 


இதில், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் இதுவரை எந்தவீரரும் காயம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், இந்த ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி, புதிய டாஸ் விதி ஆகியவை அமலாக உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  


மேலும் படிக்க | IPL Memories: தோனி ரசிகர்களால் மறக்கவே முடியாத மேட்ச்... அவரை அப்படி பார்த்ததே இல்லை - மிரண்டு போன முக்கிய வீரர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ