நடப்பு ஐபிஎல் 2023 தொடரின் 24வது ஆட்டம் பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடங்கியவுடன் வலுவான அணியாக இருந்த ஆர்சிபி அடுத்தடுத்து திடீரென தோல்விகளை சந்தித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது அந்த அணி. இப்போதைய புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் ஆர்சிபி அணியும், 6வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இருக்கின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிகள் புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடத்துக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மகளிர் அணியின் ஜெர்சியில் மும்பை இந்தியன்ஸ் - ஏன் தெரியுமா?


இரு அணிகளும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் 9 முறை சந்தித்துள்ளன. அதில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் முறையே தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு போட்டியில் முடிவு இல்லை. பெங்களுரு அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி மிகச்சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அவர் நிச்சயம் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னை அணியில் கேப்டன் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரது காயத்தை தீவிரமாக கவனித்து வருகிறது.


எனினும் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி குறித்து பேசும்போது, தோனியின் காயம் குறித்து கவலைப்பட தேவையில்லை. அவர் மிகவும் பிட்டாக இருக்கிறார். நிச்சயம் தோனி விளையாடுவார் என தெரிவித்துள்ளார். இதனால் தோனி விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகத்துடன் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 


போட்டி விவரம்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் 2023 - போட்டி 24


தேதி & நேரம்: திங்கள், ஏப்ரல் 17, மாலை 7:30 IST


இடம்: எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உத்தேச பிளேயிங் லெவன்:


விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், வனிந்து ஹசரங்கா, மஹிபால் லோம்ரோர், ஹர்ஷல் படேல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வெய்ன் பார்னெல்.


சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச பிளேயிங் லெவன்:


தோனி, ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், சிவம் துபே, மகேஷ் தீக்ஷனா


மேலும் படிக்க | சென்னை vs பெங்களூர் போட்டி கணிப்பு: இன்றைய ஐபிஎல் 2023 போட்டியில் வெற்றி யாருக்கு?


மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மைதானத்தில் நிதிஷ் ராணா - சோகீன் வாக்குவாதம்... பிரச்னையின் பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ