IPL 2023: ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே விழுந்த அடி..! 2 நட்சத்திர வீரர்கள் சந்தேகம்
ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பே ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் 2 ஸ்டார் பிளேயர்கள் அந்த அணிக்காக விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
ஐபிஎல் 2023 பிரம்மாண்டமாக அகமதாபாத்தில் தொடங்குகிறது. கிரிக்கெட் லீக்கின் உட்சபட்ச லீக்காக கருதப்படும் இந்த தொடரை உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். கோப்பையை வெல்லும் அணிகள் என இப்போது பலராலும் யூகிக்கப்பட்டிருப்பதில் வழக்கம்போல் ஆர்சிபி அணியும் இடம்பெற்றுள்ளது. ஐபிஎல் தொடங்கியது முதல் அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பை என்பது வெறும் கனவாகவே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த அணிக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே மிகப்பெரிய அடி விழுந்திருக்கிறது.
மேலும் படிக்க | GT vs CSK: முதல் போட்டியில் வெற்றி பெற சென்னை அணி செய்ய வேண்டியவை!
அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட், ஐபிஎல் தொடக்க போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் அவர், இப்போது முழுமையாக குணமடையவில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் ஹேசில்வுட் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது அவரின் உடல்நிலை சூழலை அவதானித்தபிறகு இதனை உறுதி செய்ய முடியும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது ஒரு பின்னடைவு மட்டுமே என்றிருந்த ஆர்சிபி அணிக்கு மற்றொரு மோசமான செய்தியும் கிடைத்திருக்கிறது. அதாவது அண்மையில் காயத்தில் இருந்து குணமடைந்து ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய மேக்ஸ்வெல் இப்போது பிட்டாக இல்லையாம். அதனால் அவர் தொடக்க சில போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அதிரடி ஆட்டக்காரர் மற்றும் சுழற்பந்துவீசும் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்கு சிறந்த ஒரு ஆல்ரவுண்டராக இருக்கிறார். அவரும் இப்போது பிட்டாக இல்லை என்ற தகவல் ஆர்சிபி அணிக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களும் இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆர்சிபி அணிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி பெங்களூரு அணி தங்களின் முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி பற்றியா சுவாரஸ்ய தகவல்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ