IPL: தோற்றது மும்பை... பட்டையை கிளப்பிய லக்னோ - தொடரிலிருந்து வெளியேறும் அணிகள் எவை தெரியுமா?
IPL 2023 LSG vs MI: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது பிளேஆப் வாய்ப்பையும் பிரகாசமாக்கியுள்ளது.
IPL 2023 LSG vs MI: நடப்பு ஐபிஎல் தொரின் 63ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதியது. இரு அணிகளுக்கு இப்போட்டி மிகவும் மிக முக்கிய போட்டி என்பதால் இரு அணிகளும் கடுமையாக இறுதிவரை போராடி எனலாம். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ அணி தரப்பில் குயின்டன் டி காக், தீபக் ஹூடா ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். இதில், ஹூடா 5, மான்கட் 0 ஆகியோர் இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து வெளியேறினர். தொடர்ந்து, கேப்டன் குர்னால் பாண்டியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி காக் 15 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குர்னால் பாண்டியாவுன் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்து, அவர் அதிரடியை கைக்கொண்டார்.
ஸ்டாய்னிஸ் அதிரடி
குர்னால் பாண்டியாவின் நிதானமும், ஸ்டோய்னிஸின் அதிரடியும் ஸ்கோரை சீராக உயர்த்தி வந்தது. இந்நிலையில், 42 பந்துகளை எதிர்கொண்டு தலா 1 பவுண்டரி, 1 சிக்ஸரை அடித்திருந்த குர்னால் பாண்டியா 49 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் களத்தில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து, பூரன் களமிறங்கினாலும், ஸ்டாய்னிஸ் தொடர்ந்து, அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
மேலும் படிக்க | IPL 2023: சதம் அடித்த பேட்ஸ்மேன்கள்! ஷுப்மான் கில் முதல் சூர்யகுமார் யாதவ் வரை
இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்களை எடுத்தது. ஸ்டாய்னிஸ் 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 89 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி பந்துவீச்சு தரப்பில் பெஹன்டிராப் 2 விக்கெட்டுகளவையும், பியூஷ் சாவ்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு, இஷான் கிஷன் - ரோஹித் ஜோடி நல்ல தொடக்கத்தை அளித்தது. இருவரும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களை குவித்து வந்தனர். இந்த ஜோடி, 9.4 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்த நிலையில், ரோஹித் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து சரிந்த மும்பை
தொடர்ந்து, 12ஆவது ஓவரில் இஷான் கிஷன் 59 ரன்கள் எடுத்திருந்தபோது, பீஷ்னோய் இடம் ஆட்டமிழந்தார். அடுத்து, சூர்யகுமாரின் விக்கெட்டை யாஷ் தாக்கூர் கைப்பற்றி ஆட்டத்தை மாற்றினார். வதேரா 16, விஷ்ணு வினோத் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது, டிம் டேவிட் உடன் கேம்ரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார்.
ஒருகட்டத்தில் கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது, டிம் டேவிட் அதில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். மேலும், ஒரு நோபால் பந்தில் 5 ரன்கள் பைஸ் கிடைத்தது. தொடர்ந்து, அந்த ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோஷின் கான் வீச வந்தார்.
ஒரே ஓவரில் 19 ரன்கள்
ஸ்ட்ரைக்கில் இருந்த கிரீன் முதல் பந்தை வீணடிக்க இரண்டாவது பந்தில் சிங்கிள் அடித்தார். மூன்றாவது பந்தில் டிம் டேவிட் பவுண்டரிக்கு விரட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவராலும் சிங்கிள் ரன்னையே எடுக்க முடிந்தது. இதனால், கடைசி 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, கிரீன் 4ஆவது பந்தையும் வீணடிக்க, 5ஆவது பந்தில் சிங்கிள் ரோடேட் செய்தார்.
கடைசி ஓவரில் கலக்கல்
அத்தனை தூரம் அதிரடி காட்டிய டிம் டேவிட்டால் கடைசி பந்தில் 2 ரன்களை எடுக்க முடிந்தது. இதன்மூலம், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வென்றது. கடைசி ஓவரில் மொஷின் கானின் பந்துவீச்சு அபாரமானதாக இருந்தது. டிம் டேவிட் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 32 ரன்களை எடுத்திருந்தார். லக்னோ பந்துவீச்சு சார்பில் பீஷ்னோய், யாஷ் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வானார்.
3ஆவது இடத்தில் லக்னோ
இன்றைய வெற்றி மூலம், லக்னோ அணி 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதே புள்ளியுடன் இருக்கும் சென்னை அணி, நெட் ரன்ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் நீடிக்கிறது. 14 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை அணி 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. லக்னோ அணியின் வெற்றியால் ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய அணிகள் தங்களது பிளேஆப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்டனர் எனலாம்.
வெளியேறும் அணிகள்?
ஆம், ராஜஸ்தான், கொல்கத்தா அணி முறையே 13 போட்டிகளில் விளையாடி தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முறையே 6ஆவது, 7ஆவது இடத்தில் உள்ளன. எனவே, பெங்களூரு, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் அவர்களின் வரும் போட்டியில் தோல்வியுற்றால் தான் ராஜஸ்தான், கொல்கத்தா அணிக்கு ஏதாவது வாய்ப்பு ஏற்படலாம். டெல்லி, ஹைதராபாத் அணிகள் ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.
மேலும் படிக்க | IPL Records: ஐபிஎல் போட்டிகளிலேயே மிகவும் அதிக ரன் கொடுத்த ஓவர்களை வீசிய பவுலர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ