Arjun Tendulkar: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா பாராட்டை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த உரையாடல் ஒன்றில்,"சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மகன் என்று அர்ஜுனை மதிப்பிடக்கூடாது. கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரு இளைஞனாக அர்ஜுனை மதிப்பிட வேண்டும்" என்று ஓஜா கூறினார். அர்ஜுன் டெண்டுல்கர், அவரின் பந்துவீச்சின் மூலம் பல நிபுணர்கள் மற்றும் விமர்சகர்களை கவர்ந்தார். மேலும் அவர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | DC Player: டெல்லி கேபிடல்ஸ் அணி விருந்தில் பெண்களை சீண்டிய கிரிக்கெட்டர் யார்?


அர்ப்பணிப்பு உடையாவர் அர்ஜூன்


"நான் ஒரு நாள் ஜாகீர் கானுடன் பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் வலையில் இருந்து களத்திற்கு இறக்க வேண்டிய ஒருவர், அர்ஜூன் டெண்டுல்கர். அந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உடையவர் என்று அவர் என்னிடம் கூறினார். அவரை ஒரு ஜாம்பவானின் மகனாக அல்ல, ஒரு தனிநபராக நாம் மதிப்பிட வேண்டும். அவர் மேம்பட வேண்டும்" என ஜியோ சினிமாவின் ஒரு உரையாடலின் போது ஓஜா வெளிப்படையாக கூறினார்.


"டி20 கிரிக்கெட் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், இதுபோன்ற லீக்குகளைத் தக்கவைக்க முடிந்தவரை பல திறமையாளர்களை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். கிரிக்கெட்டை அதிக அளவில் விளையாட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.


நினைத்ததை செய்தார்


குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில், அர்ஜுன் தனது இரண்டு ஓவர்களில் ஒன்பது ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். சீரான யார்க்கர்களை வைக்கும் அவரது திறமை, இறுதி ஓவர்களில் அவரது தைரியத்திற்காகவும் வல்லுநர்கள் அவரை புகழ்ந்தனர். 


"ஒரு இளைஞனாக, தனது இரண்டாவது ஆட்டத்தை விளையாடிக்கொண்டிருக்கும்போது, கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் உங்களுக்கு எதைச் சாதிக்க உதவும் என்பதை அவன் காட்டியுள்ளான் என்று நான் உணர்கிறேன். அந்த ஓவர்களை வீசுவது எளிதானது அல்ல, குறிப்பாக நீங்கள் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடும்போது. அவர் என்ன செய்ய முயன்றாரோ, அவை அவருக்கு நடந்தன.


பின்தங்கியிருக்கும் MI


அவர் பந்தை பேட்டரின் உடலுக்குள் ஸ்விங் செய்ய முயன்றார், அவரால் அதைச் செய்ய முடிந்தது. அவர் யார்க்கர்களை வீச முயன்றார், அதையும் அவரால் செய்ய முடிந்தது. அவர் மனோபாவம், திறமை ஆகியவற்றைப் பெற்றுள்ளார். மேலும் அவர் கடினமாக உழைக்க விரும்புகிறார்" என ஓஜா தெரிவித்தார். 


மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த தொடரை போலவே இந்த தொடரிலும், சற்று பின்தங்கியுள்ளது. அந்த அணி விளையாடிய 8 போட்டிகளில் 5இல் தோல்வியுற்று, 3இல் மட்டுமே வென்றுள்ளது. அந்த அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணியில் பும்ராவுக்கு ஏற்ற மாற்று வீரர் இல்லாததும், ஓப்பனர்களின் தொடர் சொதப்பலும் தான் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.  


மேலும் படிக்க | டென்ஷனான போட்டிகளுக்கு மத்தியில் ‘ஜில்’லாகும் RCB கிரிக்கெட்டர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ