இனி மேல் தோனி கிட்ட அப்படி கேட்காதீங்க.. - ஷேவாக் ஆவேசம்
தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது நியாமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் தோனி இப்போது 41 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அதனால், அவர் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என யூகங்கள் எழுந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் மைதானத்துக்கு சென்ற ரசிகர்கள் தோனிக்கு சிறப்பாக ஆதரவை தெரிவித்தனர். ஆனால், அவர் இந்த ஆண்டு ஓய்வு பெறப்போவதில்லை என்பதை இப்போது அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கும், தோனி ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு தகுதி பெற சென்னை அணிக்கு வாய்ப்பு இல்லையா?
லக்னோ - சிஎஸ்கே போட்டியின்போது தான் வர்ணணையாளர் டேனி மோரிசன் எழுப்பிய கேள்விக்கு இந்த பதிலை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் அவரிடம் எழுப்பபட்ட இந்த கேள்விக்கு ஷேவாக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சேவாக், எனக்கு சுத்தமாக புரியவில்லை. ஏன் தோனியிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டே வருகிறது. இது அவர் கடைசி ஆண்டா? இல்லையா? என்பது குறித்து ஒரு வீரரிடம் ஏன் கேட்கிறீர்கள். தோனி ஓய்வு பெற வேண்டுமா இல்லையா என்பது குறித்து அவரே முடிவு செய்து கொள்வார்.
கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இதுதான் அவருடைய கடைசி சீசன் என்று அவர் வாயால சொல்ல வைக்க வேண்டும் என இந்த கேள்வியை கேட்கிறார்கள்.ஆனால் இது குறித்து தோனி தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் இனி விளையாடுவாரா மாட்டாரா என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் என்று ஷேவாக் கூறினார். தோனி 40 வயதை ஏற்கனவே கடந்துவிட்டதாலும், ஏற்கனவே மூட்டு வலி பிரச்சனை காரணமாக அவர் பேட்டிங் செய்ய முன்வரிசையில் வருவதில்லை. இதனால் அடுத்த ஆண்டு வரை தோனி காத்திருந்தால் அவருக்கு 42 வயது ஆகிவிடும். அதன் பிறகு விளையாட முடியுமா என்பது தெரியாது. இதனால் தோனிக்கு இது தான் கடைசி சீசனாக இருக்கும் என அனைவரும் நினைக்கத் தொடங்கிய நிலையில் தோனி இவ்வாறு கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வயதானாலும் தோனியின் விளையாட்டில் எந்த சோர்வும் தெரியவில்லை. கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஸ்டம்பிங் செய்யும் தோனி, பேட்டிங்கிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை குவித்திருக்கிறது சென்னை அணி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ