ஐபிஎல் 2017: 3-வது லீக் போட்டி: கொல்கத்தா - குஜராத் இன்று மோதல்
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
இன்று நடக்க உள்ள ஐபிஎல் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் தொடங்கும்.
கடந்த சீசனில் அறிமுக அணியாக களமிறங்கியது குஜராத் அணி. கொல்கத்தா அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது.
கொல்கத்தா அணிக்கு கவுதம் காம்பீர் கேப்டனாக உள்ளார். குஜராத் லயன்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக உள்ளார்.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.