பெங்களூருவில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் நகரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலத்தில் நடந்த இரண்டாவது அமர்வில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல், கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு, ரூ 2 கோடி ரூபாய்கு விற்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய IPL-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியுடன் இணைந்த விளையாடிய 38 வயதான வீரரின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய்-யாக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு எந்த அணியினரும் ஆர்வமும் காட்டவில்லை. தொடர்ந்து இழுபறியில் இருந்த இவரது நிலைமை தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது!


இதுவரை 101 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய கெய்ல் 3626 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரே ஆட்டத்தில் 175 ரன்கள் எடுத்த லீக்-ன் சிறந்த வீரர் எனும் பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பகுதிநேர வலதுகை சுயற்பந்து வீச்சினால் ஜமைக்கா மன்னில் 18 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை கொண்டவர்.


முன்னதாக நேற்றைய முதல் நாள் ஏலத்தில் இவரை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை, அதேப்போல் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இவரை யாரும் ஏலம் எடுக்கவில்லை!


நீண்ட இழுபறிக்குப் பிறகு தற்போது Kings XI அணி இவரை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.



முன்னதாக இன்றைய இரண்டாம் நாள் ஏலத்தில், தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை பெங்களூரு அணி ரூ. 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஜெய்தேவ் உனத்கட் ரூ.11.50 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு ஏலம் போனார். இரண்டாம் சுற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நபர்களில் ஜெய்தேவ் 2-வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது!