ப்ரீத்தி ஜிந்தா பற்றி பேசிய சுரேஷ் ரெய்னா - லைவ் ஷோவில் வெளியேறிய இர்ஃபான் பதான்
ஐபிஎல் போட்டியில் கமெண்டராக இருக்கும் இர்ஃபான் பதான், ப்ரீத்தி ஜிந்தா பற்றி சுரேஷ் ரெய்னா பேசியதால் கடுப்பாகி லைவ்ஷோவில் இருந்து வெளியேறினார்.
10 அணிகள் பங்கேற்றிருக்கும் ஐபிஎல் போட்டியில் நாள்தோறும் திரில்லான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேநேரத்தில் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. இந்த ஆண்டு முதல் சர்ச்சையை கமெண்டராக அவதாரமெடுத்திருக்கும் சுரேஷ் ரெய்னா தொடங்கி வைத்திருக்கிறார். அவரின் சர்ச்சைக் கருத்தால் கடுப்பான இர்ஃபான் பதான், லைவ் ஷோவில் இருந்து பாதியில் வெளியேறினார்.
மேலும் படிக்க | ஜடேஜாவை புகழ்ந்து தோனியை புறக்கணித்த ரெய்னா - காரணம் என்ன?
ப்ரீத்தி ஜிந்தா பற்றி உரையாடல்
இந்த ஐபிஎல் போட்டியில் வர்ணணையாளராக களமிறங்கியுள்ளார் சுரேஷ் ரெய்னா. கடந்த சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவரை இந்த ஆண்டு எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இதனால், ஸ்டார்ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் வர்ணணையாளராக களமிறங்கியிருக்கும் அவர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதிய போட்டியிலும் கலந்து கொண்டார். அப்போது, இர்ஃபான் பதான் தனக்கு பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட சுரேஷ் ரெய்னா அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவைப் பற்றி பேசினார். இதில் கடுப்பான இர்ஃபான் லைவ்ஷோவில் திடீரென வெளியேறினார்.
ரெய்னாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வர்ணணையாளர்கள் அமரும் சீட்டில் சென்று அமர்ந்து கொண்ட பதான், லைவ் ஷோவுக்கு வரவில்லை எனத் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்துமாறு தொகுப்பாளர்கள் ரெய்னாவிடம் கேட்டுக் கொண்டனர். ரெய்னாவும் இர்பானிடம் சென்று லைவ்ஷோவுக்கு வருமாறு அழைத்தார். அதுவரை கடுப்பாக இருப்பதுபோல் ஆக்டிங் செய்த இர்பான், உடனே குபீரென சிரிக்க ஆரம்பித்தார். அப்போது தான் ரெய்னாவுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதிக்காக ஏப்ரல் ஃபூல் ஆக்கியுள்ளனர் என தெரிந்தது. பின்னர் ரெய்னாவும் சிரிக்கத் தொடங்கினார்.
ரெய்னா ஐபிஎல் ஹிஸ்டரி
மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா, பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணியின் தூண்களில் ஒருவராக இருந்த அவர், சென்னை அணியை தனி ஒருவராக பல போட்டிகளில் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இதுவரை 205 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 5528 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போரை முன்பே கணித்தாரா ஜோப்ரா ஆர்ச்சர்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR