கிங்ஸ்டன் (ஜமைக்கா): இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் நடந்து வரும் டெஸ்ட் தொடர் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்தியாவுக்கு சாதகம் அதிகமாகவே உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்தபடி ரிஷப் பந்தின் பேட்டிங் சரியாக இல்லை. அது விவாதத்திற்கு உள்ளானது. ஆனால் தனது விக்கெட் கீப்பிங்கில் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியில் நீண்ட காலமாக எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக தோனி 15 போட்டிகளில் படைத்த சாதனையை 11 போட்டிகளிலே ரிஷப் பந்த் செய்துள்ளார்.


ஜமைக்காவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நேர ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரரான கிரெய்க் பிராத்வைட் 3(7) ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த கேட்ச் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக ரிஷ்ப் பந்த் 50_வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் வேகமாக 50வது விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 11 டெஸ்ட் போட்டிகளிலே 50வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். எம்.எஸ். தோனி 15 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


8 விக்கெட் கைவசம் கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இன்று நான்காவது நாளாக தொடர்ந்து ஆட உள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 423 ரன்கள் தேவை.