டென்மார்க்: உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. இளவேனின் வாலறிவன், ஸ்ரேயா அகர்வால், ரமிதா ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் குழு தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 17-5 என்ற கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகுவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும். டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை இளவேனில் வளரிவன், நிகழ்வின் இறுதிப் போட்டியில், 11 தொடர்களிலும் 10 புள்ளிகளுக்கு மேல் எடுத்ததன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


ஸ்டேஜ் 2 தகுதிச் சுற்றில், இந்திய அணி டென்மார்க்கை விட பின்தங்கியது. ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடிந்தது.


மேலும் படிக்க: விராட்கோலி இடத்தை காலி செய்யப்போகும் 19 வயது இளைஞர்



மேலும் படிக்க: ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற அணி பெரும் தொகை எவ்வளவு தெரியுமா?


மறுபுறம், ருத்ராங்க்ஷ் பாலாசாஹேப் பாட்டீல், பார்த் மகிஜா மற்றும் தனுஷ் ஸ்ரீகாந்த் அடங்கிய ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் குரோஷியாவிடம் 16-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தகுதிச் சுற்றில் இந்திய அணி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.


இதற்கு முன், கலப்பு ரைபிள் போட்டிகளுக்காக இந்தியா இரண்டு வெவ்வேறு அணிகளை களமிறக்கியிருந்தது. ஆனால் இரண்டு அணிகளும் பதக்கச் சுற்றுக்கு வரத் தவறினர். 


வியாழன் முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவுகளில் போட்டியிடுவார்கள். இப்போதைக்கு, இந்தியா தற்போது பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 4 பதக்கங்களுடன் செர்பியா முன்னணியில் உள்ளது.


மேலும் படிக்க: பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் காப்ரேஷனில் பணி நியமனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR