உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியா நான்காவது பதக்கம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4 ஆகா உயர்ந்துள்ளது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஜித்து ராய் வெண்கல பதக்கம் வென்றார். இரட்டையருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ஹீனா சித்து மற்றும் ஜீத்து ராய் ஆகியோர் தங்கம் வென்றிருக்கிறனர். அதேபோல நேற்று நடந்த
ஆண்களுக்கான டபுள் டிராப் பந்தயத்தில் 74 புள்ளிகள் சேர்த்த 24 வயதான இந்திய வீரர் அங்குர் மிட்டல் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா காட்கர் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.
இதன்மூலம் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது