DC vs KKR : பிரேசர் மெக்குர்க் -ஐ பிளான் போட்டு காலி செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! ஸ்டார்க் அபாரம்
Delhi Capitals - Kolkata Knight Riders Match Highlights : ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் அதிரடி வீரர் பிரேசர் மெக்குர்க்-ஐ சரியாக பிளான் போட்டு அவுட்டாக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி இந்த விக்கெட்டை எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 47வது லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் அறிவித்தார். அதன்படி, டெல்லி அணியில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 22 வயதே ஆன அதிரடி வீரர் பிரேசர் மெக்குர்க், பிரித்திவி ஷா ஆகியோர் களமிறங்கினர். இரு அணிகளுக்கும் இடையிலான கடந்த போட்டியே ரன் வேட்டையாக இருந்ததால், அதனைப்போலவே இந்த போட்டியும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க | 'Dream 11 ஒரு மோசடி செயலி...' லட்சக்கணக்கில் ரூபாயை பறிகொடுத்த நபர் - பின்னணி என்ன?
ஏனென்னறால் அந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆடி 271 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 166 ரன்களுக்கு ஆட்டமிழக்க 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியே அந்த அணிக்கு பெரும் நம்பிக்கை கொடுத்து அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற உதவியது. அப்போட்டியில் டெல்லி அணிக்காக பிரேசர் மெக்குர்க் விளையாடவில்லை. அதன்பிறகே ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி அணிகாக இணைந்த அவர், அதிரடி காட்டி அனைவரையும் வாயை பிளக்க வைத்தார்.
இந்த ஐபிஎல் போட்டியில் அவருடைய ஸ்டைக்ரேட் 238க்கும் மேல் இருக்கிறது. இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு பிளேயருக்கு இருக்கும் அதிகபட்ச ஸ்டைக் ரேட்டாகவும் இருக்கிறது. இந்த சூழலில் தான் டெல்லி அணி கொல்கத்தா அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொண்டது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்காக டெல்லி அணி பழிவாங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு குறிப்பாக மெக்குர்க் அதிரடியாக ஆடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மெக்குர்க் ஆட்டத்தை பார்த்த கொல்கத்தா, அவருக்கு என பிரத்யேக பிளானை தயார் செய்தது. யார்க்கர் லைனில் பந்துகளை ஸ்டம்புகளை குறிவைத்து மட்டுமே வீச வேண்டும் என்ற திட்டத்தோடு இறங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு நட்சத்திரமான மிட்செல் ஸ்டார்க், சக நாட்டு வீரரான மெக்குர்க்கிற்கு துல்லியமாக பந்துவீசினார். சிக்சர் பவுண்டரி என அடித்தாலும், டக்கென பிளானுக்கு ஏற்ப யார்க்கர் லைனில் மிடில் ஸ்டம்பை நோக்கி வீசினார் மிட்செல் ஸ்டார்க். வெங்கடேஷ் ஐயரை லெக்சைடிலும் நிற்கவைத்திருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே ஸ்டார்க் வீசிய அந்த பந்தை லெக்சைடில் அடிக்க வெங்கடேஷ் சூப்பராக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இதனால் பிரேசர் மெக்குர்க் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார். மெக்குர்க் அதிரடியை எதிர்பார்த்தவர்களுக்கு இப்போட்டி கொஞ்சம் ஏமாற்றம் தான். அதேநேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர்களுக்கு அவர் சீக்கிரம் அவுட்டானதில் பெரிய மகிழ்ச்சி.
மேலும் படிக்க | இஷான் கிஷானுக்கு மீண்டும் அபராதம் விதித்த பிசிசிஐ! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ