இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!
JioCinema IPL 2024: ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய விளம்பரமில்லா திட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் vs டெல்லி போட்டியின் போது முதல் முறையாக தெரிவித்தது.
ஜியோ சினிமா ஓடிடி தளம் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியன் பிரீமியர் லீக் 2024 போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. மேலும் சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக வழங்கியது. போட்டியை பார்க்க தொடங்கும் முன்பு ஒரு விளம்பரம் மட்டும் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் கிரிக்கெட்டை பார்க்கக்கூடிய புதிய சந்தா திட்டத்தை ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. ஏப்ரல் 20 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் போது ஒரு புதிய விளப்பரம் ஒளிபரப்பப்பட்டது.
மேலும் படிக்க | IPL 2024: கோடி கோடியாக கொடுத்தும் பயனில்லாமல் போன 10 வீரர்கள்!
மேலும் ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 21 அன்று X தளத்தில் அந்த புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில் “மாற்றம் நிலையானது, ஆனால் உங்கள் திட்டம் இருக்க வேண்டியதில்லை" என்று பதிவிட்டுள்ளது. ஜியோசினிமா இந்த புதிய திட்டத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் விளம்பரங்கள் இல்லாத ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த போகிறது என்பது மட்டும் நமக்கு புரிகிறது.
ஜியோ சினிமா சந்தா விலை
தற்போதும் ஜியோ சினிமா சந்தா திட்டங்களை வைத்துள்ளது. ஆண்டு முழுக்க ஜியோ சினிமாவில் உள்ள தொடர்கள் மற்றும் படங்களை பார்க்க ரூ.999 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் பயனர்கள் ரூ.99க்கான மாதாந்திர திட்டத்தையும் பெற்று கொள்ளலாம். ஜியோசினிமா பிரீமியம் சந்தா பெற்றால், அதன் மூலம் HBO தொடர்களை பார்க்க முடியும்.அது மட்டுமின்றி பிற தொலைக்காட்சி தொடர்களையும் பார்க்க முடியும். மேலும் பிரீமியம் பயனர்கள் அதிகபட்ச வீடியோ மற்றும் ஆடியோ தரத்தை இதன் மூலம் பெறுவார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை ஒன்றிணைக்க ஒப்புக்கொண்டன. "இந்தியாவில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளடக்கத்திற்கான முன்னணி டிவி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான, பொழுதுபோக்கு (கலர்ஸ், ஸ்டார்பிளஸ், ஸ்டார்கோல்ட்) மற்றும் விளையாட்டுகள் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ்18) ஆகியவற்றை ஒன்றிணைப்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்தன.
மேலும் படிக்க | இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ