தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை சிறத்த பீல்டர் என புகழ்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது ஆட்டகாலத்தில் சிறந்த பீல்டராக கருதப்பட்ட தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் ICC-க்கு பேட்டி ஒன்று அளித்தார். இப்பேட்டியில் சிறந்த பீல்டருக்கான 5 பேர் கொண்ட பட்டியலில் சுரேஷ் ரெய்னாவுக்கு தான் முதல் இடம் என குறிப்பிட்டுள்ளார்.


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தற்போது வர்ணனையாளராக உள்ளார். இந்நிலையில் இவர் தன்னை பொறுத்தவரை அவர் சிறந்த பீல்டராக கருதுபவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். 


அதில் சுரேஷ் ரெய்னாவுக்கு தான் முதல் இடம் என தெரிவித்துள்ளார். ரெய்னா குறித்து அவர் பேசும் போது, "இந்தியாவில் பீல்டிங் செய்வது மிகவும் கடினமான ஒன்று. ரெய்னா விளையாட தொடங்கியது முதலே அவரினை ரசிகராகிவிட்டேன்" என பெருமிதம் தெரவித்துள்ளார்.


ஜான்டி ரோட்ஸ் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் தலா ஒரு வீரர்களும், தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து இரண்டு வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.



ஜான்டி ரோட்ஸ்-ன் இந்த கருத்திற்கு நன்றி தெரிவித்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...