மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை தழுவியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் கடைசி ஓவரில் மும்பை வீரர் சாம்ஸ் சிறப்பாக பந்துவீசி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியின் ஆட்டம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!


20 ஓவர் தொடரில் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்திப்பது நல்லதல்ல. உடனடியாக அணி வெற்றிப் பாதைக்கு செல்ல வேண்டும் என விரும்புகிறோம். அடுத்து வரும் போட்டிகளில் இதனைக் கவனத்தில் கொண்டு விளையாடுவோம் எனக் கூறினார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி தோல்வியைத் தழுவினாலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலேயே இருக்கிறது. அந்த அணி ஒரே ஒரு வெற்றியைப் பெற்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். புதிய அணியாக இந்த தொடரில் களமிறங்கினாலும், சிறப்பாக விளையாடி வருகிறது.



கடந்த  ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுகுறித்து வெளிப்படையாக பேசி இருக்கும் பாண்டியா, மும்பை அணியில் இருந்து ஒரு வீரரை குஜராத் அணியில் சேர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த பாண்டியா, பொல்லார்டு எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து கைரன் பொல்லார்டுக்கும் சில நாட்களுக்கு முன்பு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பியதாக பாண்டியா தெரிவித்துள்ளார்.


"சில நாட்களுக்கு முன்பு பொல்லார்டுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். அதில், நீங்கள் குஜராத் அணிக்காக விளையாட வேண்டும். நீங்கள் விரும்பினால் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்" எனக் கூறியதாக தெரிவித்துள்ளார். இது நடக்காது என்று தெரிந்திருந்தாலும், பொல்லார்டை அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். 



இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கைரன் பொல்லார்டுக்கு சிறப்பாக இல்லை. 10 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் வெறும் 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரே ஒரு போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் பந்துவீச்சும் எடுபடவில்லை. ஐபிஎல் இறுதிக் கட்டத்திலாவது சிறப்பாக விளையாடுவார் என மும்பை ரசிகர்கள் பொல்லார்டு மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். 


மேலும் படிக்க | ஐபிஎல் 2022: வித்தியாசமான முறையில் அவுட் ஆனா சாய் சுதர்சன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR