KKRvsRCB: டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2019 தொடரின் 35-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.
19:42 19-04-2019
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
கொல்கத்தா: 8 போட்டிகள் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ள பெங்களூரு அணி, இன்றைய போட்டியின் வெற்றி பெற்று தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் ஏறக்குறைய பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. இனிவரும் அனைத்து போட்டியிலும் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்றைய வெற்றி தகுதி போட்டிக்கு தங்கள் இருப்பை உறுதி செய்ய தேவையான முக்கிய போட்டியாகும். ஆண்ட்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி வெற்றி பெற்று வந்தது. ஆனால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்ப்பட்டு உள்ளது.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமாக இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.