ICC t20 தரவரிசை பட்டியல்; இரண்டாவது இடத்தில் கே.எல்.ராகுல்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரினை இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை தட்டி சென்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ICC தர நிலை கனிசமான ஏற்றம் கண்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரினை இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை தட்டி சென்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ICC தர நிலை கனிசமான ஏற்றம் கண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில்., இந்த தொடரில் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் வகித்த கண்ணூர் லோகேஷ் ராகுல், ICC ஆண்களின் டி20 பிளேயர் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி, தனது தொழில் வாழ்க்கையில் சிறந்த இடம் ஒன்றை பெற்றுள்ளார். இவரைப்போன்றே மற்ற வீரர்களும் குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா மூன்று இடங்களில் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார், ஸ்ரேயாஸ் ஐயர் 63 இடங்களை தாண்டி 55-வது இடத்திற்கு முன்னேறினார், மணீஷ் பாண்டே 58-வது இடத்தைப் பிடித்தார், இது அவரது கடைசி தரவரிசையில் இருந்து 12 இடங்கள் முன்னேற்றம் கண்ட இடம் ஆகும்.
எனினும், கேப்டன் விராட் கோலி நான்கு போட்டிகளில் 105 ரன்கள் எடுத்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார். ஆக டி20 பேட்ஸ்மேன் தரவரிசையின் முதல் 10 இடங்களில் அதிக பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது எனலாம். குறிப்பாக கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தங்களது இருப்புகளை இப்பட்டியலில் உறுதி செய்துள்ளனர்.
எனினும் இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் பாபர் ஆசாம். 879 புள்ளிகளுடன் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் கே.எல்.ராகுல் 823 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பிஞ்ச், நியூசிலாந்தின் கொலின் மன்ரோ மற்றும் இங்கிலாந்தின் டேவிட் மாலன் ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டி20 தவறவிட்ட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தொடரில் 160 ரன்கள் எடுத்ததன் காரணமாக தரவரிசையில் 16-வது இடத்தில் தங்கியுள்ளார். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் டிம் சீஃபர்ட் 73 ரன்களில் இருந்து குவாண்டம் ஜம்ப் செய்துள்ளார் மூத்த பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் இப்போது 39-வது இடத்திலும், லெக் ஸ்பின்னர் இஷ் சோதி பந்து வீச்சாளர்களில் 13-வது இடத்திலும் உள்ளனர்.
அதேவேளையில் இந்திய பந்து வீச்சாளர்களும் தரவரிசையில் வேகமாக முன்னேறியுள்ளனர், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 26 இடங்களை முன்னேற்றிய பின்னர் 11-வது இடத்தில் உள்ளார், ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் இப்போது கடைசி தரவரிசையில் 40-வது இடத்திலிருந்து 30-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் இந்த தொடரில் ஷார்துல் தாகூரின் எட்டு விக்கெட்டுகள் அவரை 34 இடங்கள் முன்னேற்றி 57-வது இடத்திற்கு கொண்டுவந்துள்ளது. நவ்தீப் சைனி 25 இடங்கள் முன்னேறி 71-வது இடத்திற்கும், ரவீந்திர ஜடேஜா 76-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
தர நிலை | வீரர் பெயர் | அணி | புள்ளிகள் |
1 | பாபர் ஆசாம் | PAK | 879 |
2 | லோகேஷ் ராகுல் | IND | 823 |
3 | ஆரோன் பிஞ்ச் | AUS | 810 |
4 | கொலின் மன்ரோ | NZ | 785 |
5 | டேவிட் மாலன் | ENG | 782 |
6 | க்ளென் மேக்ஸ்வெல் | AUS | 766 |
7 | எவின் லூயிஸ் | WI | 702 |
8 | ஹர்சாத்துல்லா | AFG | 692 |
9 | விராட் கோலி | IND | 673 |
10 | ரோகித் சர்மா | IND | 662 |
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அனுபவமிக்க வீரர்கள் ஷோயப் மாலிக் மற்றும் முகமது ஹபீஸ் முறையே 45 மற்றும் 71-வது இடங்களுக்கு முன்னேறியுள்ளனர், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தலா அரைசதம் அடித்த பின்னர். இந்த தொடரில் அரைசதம் அடித்த மூன்றாவது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இந்த தொடரில் இரண்டு விக்கெட்டுகளுடன் 72-வது இடத்திலிருந்து 39-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மொத்தம் 104 ரன்கள் எடுத்து தொடரில் அதிக ரன்கள் அடித்த பங்களாதேஷ் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் 11 இடங்களைப் பெற்று 50-வது இடத்தை எட்டியுள்ளார். அல் அமீன்-ஹொசைன் 25 இடங்களைப் பெற்ற பின்னர் பந்து வீச்சாளர்களிடையே 51-வது இடத்தில் உள்ளார்.