சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையினை பெற்றார் இலங்கை வீரர் லசித் மலிங்கா!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த இலங்கை வேகப்பந்து வீச்சாளரும், அணியின் கேப்டனுமான லசித் மலிங்கா, நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.


36 வயதான மலிங்கா, மூன்றாவது ஓவரில் கொலின் மன்ரோ, ஹமிஷ் ரதர்ஃபோர்ட், கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு ஹாட்ரிக் எடுத்த ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமையினையும் பெற்றார்.



2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த சூப்பர் எட்டு போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மலிங்கா இந்த சாதனையை முதன்முதலில் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் ஒரு டி20 போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அயர்லாந்துக்கு எதிராக இந்த சாதனையை செய்தார்.


சர்வதேச கிரிக்கெட் பொறுத்தவரையில் இது மலிங்காவின் ஐந்தாவது ஹாட்ரிக் விக்கெட்டாகும். இதன் மூலம் ஐந்து முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்னும் பெருமையினையும் பெற்றார் மலிங்கா. இவருக்கு முன்னதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் நான்கு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.