ஐ.சி.சி. டெஸ்ட் தர வரிசை பட்டியல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புனே நகரில் நேற்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புனே நகரில் நேற்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தர வரிசை பட்டியலில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பந்து விச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணி தோல்வி அடைந்த நிலையிலும், தொடர்ந்து தனது முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
இந்த தர வரிசை பட்டியலில், தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் 46-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்கள் வரிசையில் 878 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலேயே அஸ்வின் உள்ளார். ரவீந்திர ஜடேஜா தனது 2-வது இடத்தினை 860 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியினர் ஐசிசி டெஸ்ட் தர வரிசை பட்டியலில் முக்கிய இடங்களுக்கு முன்னேறியுள்ளனர். அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார்.
அவர் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்து விராட் கோலியை விட 66 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார்.
இதேபோன்று, மேட் ரென்ஷா 34-வது இடத்திற்கும், ஸ்டீவ் ஓ கீஃப் 29வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்டார்க் பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் 61-வது இடத்திற்கு அதிரடியாக முன்னேறியுள்ளார்.