Gukesh D : விஸ்வனாதன் ஆனந்தின் இடத்தை பிடித்த 17 வயது செஸ் வீரர்! என்ன சாதனை தெரியுமா?
Chess Grand Master Gukesh D : செஸ் விளையாட்டு ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தை, ஒரு 17 வயது இளம் செஸ் வீரர் பெற்றிருக்கிறார். இவர் யார்? செய்த சாதனை என்ன? அது குறித்து இங்கு பார்ப்போம்.
Chess Grand Master Gukesh D : தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர்கள் சிலர், தேசிய மற்றும் உலகளவில் நடக்கும் சதுரங்க விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கும், சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை செஸ் விரரான 17 வயது நிரம்பிய டி குகேஷ் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைப்பெற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
சாதனை:
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் (FIDE)உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, கனடா நாட்டில் உள்ள டொரண்டோ நகரில் நடைப்பெற்றது. இதில் இந்தியா சார்பில் டி குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்-வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
உலக சாம்பியனுக்கான சவாலை தீர்மானிக்கும் போட்டி நடைப்பெற்றது. இதில், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். போட்டியின் முடிவில், ஹிகாரு நகமுராவின் புள்ளிகளுடன் டிரா செய்தார். இந்த வெற்றியின்படி, நடப்பு உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் நடைபெறும் போட்டியில் மோத, குகேஷிற்கும் உரிமை இருக்கிறது. 1984ஆம் ஆண்டு ரஷ்ய செஸ் ஜாம்பவான் காபரோ செய்திருந்த சாதனையை முறியடித்திருக்கிறார், குகேஷ்.
விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தை பெற்றார்..
விஸ்வநாதன் ஆனந்த், இதுவரை 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். இவர், 2014ஆம் ஆண்டு இப்போட்டியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது அந்த இடத்தை பெற்ற இரண்டாவது செஸ் சாம்பியன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார், குகேஷ். 2014ஆம் ஆண்டிற்கு பிறகு, மிக இளமையான உலக செஸ் சாம்பியன் இந்தியராக இருப்பது இதுவே முதல் முறை என்ற பட்டமும் குகேஷையே சாரும்.
பரிசுத்தொகை..
இப்போட்டியில் கலந்து கொண்டுள்ள குகேஷிற்கு மொத்தம் 88,500 யூரோக்கள் ரொக்கப்பரிசாக கிடைத்திருக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.78.5 லட்சங்களாகும். இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் மொத்த பரிசுத்தொகை, 5,00,000 யூரோக்கள் ஆகும்.
மேலும் படிக்க | IPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...
விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு:
செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், குகேஷை பாராட்டி ட்விட்டர் பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், குகேஷுக்கு மனதார வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், கடினமான சூழ்நிலைகளை குகேஷ் எதிர்கொண்டதை கண்டு தான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் குகேஷிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குகேஷிற்கு வாழ்த்துகளை தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
குகேஷிற்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் தமிழக அரசு செய்து தரும் என அவர் தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | IPL playoffs: இன்னும் ஆர்சிபி அணிக்கு பிளேஆப் செல்ல வாய்ப்புகள் உள்ளதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ