சென்னை ஓபன்: போராடி வென்றார் செக் நாட்டின் 2K கிட் - பரிசை வழங்கினார் ஸ்டாலின்
சென்னை ஓபன் மகளிர் தொடரின் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை மக்தா லினெட்-ஐ 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, செக் குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சர்வதேச சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஸ்பான்சர் இல்லாததால் புனேவுக்கு மாற்றப்பட்டது. பின்னர், மீண்டும் இந்தாண்டு முதல் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இந்த முறை பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டிகள் அனைத்தும், நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT மைதானத்தில் நடைபெற்றன.
செப். 13ஆம் தேதி தொடங்கிய இத்தொடரின் இறுதிநாளான இன்று, ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இதில், ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், போலந்து வீராங்கனை மக்தா லினெட், செக் குடியரசு நாட்டின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா உடன் மோதினார்.
மேலும் படிக்க | 'இந்த நாள் வரவே கூடாது என்று விரும்பினேன்' - பெடரருக்கு நடாலின் பிரியாவிடை ட்வீட்!
முதல் செட்டை மக்தா லினெட் 6-4 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் லிண்டா கைப்பற்றினார். இதனால், போட்டி மூன்றாவது செட்டை நோக்கி நகர்ந்தது. மூன்றாவது செட்டின் தொடக்கத்தில் லினெட் ஆதிக்கம் செலுத்தினாலும், பின் சுதாரித்துக்கொண்ட லிண்டா, அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். ஒரு கட்டத்தில் 1-4 என்ற கணக்கில் பின் தங்கியிருந்த லிண்டா, ஒரே மூச்சில் 6-4 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை வென்றார்.
மூன்றாவது செட்டை கைப்பற்றியதன் மூலம், ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை 17 வயதே ஆன லிண்டா வென்றார். இதையடுத்து, முதல் பரிசுக்கான கோப்பையை லிண்டாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். ரன்னர்-அப் கோப்பையை லினெட்டிற்கு முதலமைச்சர் வழங்கினார். இருவரின் பரிசுத்தொகையையும் அமைச்சர் கே.என். நேரு வழங்கினார். அப்போது, அமைச்சர் மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
போட்டிக்கு பின்னர் பேசுகையில், சாம்பியன் பட்டத்தை வென்ற லிண்டா ஆனந்த கண்ணீர் வடித்தது, பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. முன்னதாக நடைபெற்ற, இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) - கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடி கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சென்னை ஓபன்: இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்ற பிரேசில்-கனடா ஜோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ