AUS vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்கு 289 ரன்கள்
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடி வருகிறது.
19:01 06-06-2019
49 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த ஆஸ்திரேலியா 288 ரன்கள் எடுத்துள்ளது.
18:27 06-06-2019
நன்றாக நிலைத்து நின்று ஆடி வந்த ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவன் ஸ்மித் 73(102) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.
17:29 06-06-2019
30.4 ஓவரில் அலெக்ஸ் கேரி 45(55) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
16:57 06-06-2019
23.2 வது ஓவரில் 100 ரன்கள் கடந்த ஆஸ்திரேலியா அணி. தற்போது ஸ்டீவன் ஸ்மித்* 25(47) மற்றும் அலெக்ஸ் கேரி* 12(31) விளையாடி வருகின்றனர்.
16:27 06-06-2019
16.1 ஓவரில் மார்கஸ் ஸ்டோனெனிஸ் 19(23) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 79 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை இழந்த்துள்ளது.
15:50 06-06-2019
ஆஸ்திரேலிய அணி 7.4 ஓவரில் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. தற்போது முன்னால் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்கஸ் ஸ்டோனெனிஸ் அடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 10 ஓவர் முடிவில் 48 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற உள்ள 10வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மற்றும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டம் நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி ஆரம்ப முதலே தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலிய கேப்டன் உட்பட தொடக்க வீரர்கள் மூன்று பேர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்கள். 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.