IPL 2022 Mega Auction: முதல் நாள் `மெகா ஐபிஎல் ஏலம் 2022` முடிந்தது
IPL Mega Auction 2022: மெகா T20 ஏலம் 2022-ல் எந்த வீரர் எந்த அணியில் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். அனைத்து விவரங்களும் கீழே இங்கே உள்ளது.
இந்த வருடம் ஐபிஎல்-ல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. மேலும், 2 புதிய அணிகள் ஐபிஎல்-ல் இணைந்துள்ளது. மொத்தமாக 10 அணிகள் இனி வரும் ஆண்டுகளில் விளையாட உள்ளன.
Latest Updates
இன்றைய ஏலம் முடிந்தது:
இன்று கடைசியாக ஏலம் கூறப்பட்ட சந்தீப் லாமிச்சானே எந்த அணியும் வாங்கவில்லை. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாக இருந்தது.ஆர். சாய் கிஷோர்:
இந்திய பவுலரான ஆர். சாய் கிஷோரை அகமதாபாத் ரூ. 3 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாக இருந்தது.ஜெகதீஷா சுஜித்:
ஆரம்ப அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஜெகதீஷா சுஜித்தை ஹைதராபாத் ஏலம் எடுத்தது.ஷ்ரேயஸ் கோபால் :
ரூ. 75 லட்சத்துக்கு ஷ்ரேயஸ் கோபால்-ஐ ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.கே சி கரியப்பா:
ராஜஸ்தான் அணி ரூ. 30 லட்சத்துக்கு கே சி கரியப்பாவை ஏலம் எடுத்தது.முருகன் அஸ்வின்:
இந்திய வீரர் முருகன் அஸ்வின்-னை ரூ. 1.60 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்.நூர் அஹ்மது:
ஆப்கானிஸ்தான் நாட்டை செந்தா நூர் அஹ்மது-வை அவரின் ஆரம்ப அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.அன்கிட் சிங் ராஜ்புத்:
லக்னோ அணி ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.துஷார் டேஷ்பாண்டே:
இந்திய வீரர் துஷார் டேஷ்பாண்டேவை அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது.இஷான் போரேல்:
இந்திய வீரர் இஷான் போரேல்-ஐ 25 லட்சத்துக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்.அவேஷ் கான்
இந்திய வீரர் அவேஷ் கானை ரூ. 10 கோடிக்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.கே.எம்: ஆசிஃப்:
இந்திய பந்து வீச்சாளரான கே.எம்: ஆசிஃப் -ஐ சென்னை அணி அவரின் ஆரம்ப அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.ஆகாஷ் தீப்:
இந்திய பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்யை பெங்களூர் அணி அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.கார்த்திக் தியாகி:
இந்திய வேக பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகி-ஐ ஹைதராபாத் அணி ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.பேசில் தம்பி
இந்திய வீரர் பேசில் தம்பியை மும்பை அணி ரூ. 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கக்து.ஜிதேஷ் சர்மா:
இந்திய வீரர் ஜிதேஷ் சர்மாவை பஞ்சாப் அணியை அவரின் ஆரம்ப விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.ஷெல்டன் ஜாக்சன்:
இந்திய வீரர் ஷெல்டன் ஜாக்சனை கொல்கத்தா அணி ரூ. 60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 30 லட்சம்.பிரப்சிம்ரன் சிங்
விக்கெட் கீப்பரான இந்திய வீரர் பிரப்சிம்ரன் சிங் -ஐ பஞ்சாப் அணி ரூ. 60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.
அனுஜ் ராவத்:
டெல்லியை சேர்ந்த விக்கெட் கீப்பரான இந்திய வீரர் அனுஜ் ராவத் -ஐ பெங்களூர் அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.கே.எஸ்.பாரத்:
விக்கெட் கீப்பrரான இந்திய வீரர் கே.எஸ்.பாரத் -ஐ டெல்லி அணி ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.ஷபாஸ் அஹ்மது:
ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ஷபாஸ் அஹ்மதுவை பெங்களூர் அணி ரூ. 2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 30 லட்சம்.ஹர்ப்ரீத் பிரார்:
ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ஹர்ப்ரீத் பிரார்-ஐ பஞ்சாப் அணி ரூ. 3.80 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.கம்லேஷ் நாகர்கோட்டி:
ஆல் ரவுண்டரான இந்திய வீரர் கம்லேஷ் நாகர்கோட்டியை டெல்லி அணி ரூ. 1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாகும்.ராகுல் டெவாடியா:
ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ராகுல் டெவாடியாவை குஜராத் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாகும்.சிவம் மாவி:
ஆல் ரவுண்டரான இந்திய வீரர் சிவம் மாவியை கொல்கத்தா அணி ரூ. 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாகும்.ஷாருக் கான்:
ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ஷாருக் கானை பஞ்சாப் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாகும்.ஷரஃராஸ் கான்:
ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ஷரஃராஸ் கானை டெல்லி அணி அவரின் ஆரம்ப அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.அபிஷேக் ஷர்மா:
ஆல் ரவுண்டரான இந்திய வீரர் அபிஷேக் ஷர்மாவை ஹைதராபாத் அணி ரூ. 6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்.ரியான் பராக்
ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ரியான் பராக்-ஐ ரூ. 3.80 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 30 லட்சமாக இருந்தது.ராகுல் திரிபாதி:
இந்திய வீரர் ராகுல் திரிபாதியை ரூ. 8.50 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாக இருந்தது.அஸ்வின் ஹெப்பார்:
இந்திய வீரர் அஸ்வின் ஹெப்பாரை ரூ. 2.60 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலையும் ரூ. 20 லட்சமாகும்.டேவால்ட் ப்ரேவிஸ்
தென்னாப்பிரிக்கா வீரர் டேவால்ட் ப்ரேவிஸ்-ஐ ரூ. 3 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்.அபினவ் சடரங்கனி
இந்திய வீரர் அபினவ் சடரங்கனியை ரூ. 2.60 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்ப்ரியம் கார்க்:
இந்திய வீரர் ப்ரியம் கார்க்கை ரூ. 20 லட்சத்துக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப விலையும் ரூ. 20 லட்சமாகும்.ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஒவ்வொரு அணிக்கும் மீதமுள்ள ரூபாய்!
- பஞ்சாப் கிங்ஸ் - 42.50 கோடி
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 40.30 கோடி
- குஜராத் டைட்டன்ஸ் - 33.75 கோடி
- மும்பை இந்தியன்ஸ் - 32.75 கோடி
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 20.85 கோடி
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 20.50 கோடி
- டெல்லி கேப்பிடல்ஸ் - 20 கோடி
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 17.40 கோடி
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 16.25 கோடி
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 15.25 கோடியுவேந்திர சாஹல்
இந்திய வீரர் யுவேந்திர சாஹலை ரூ. 6.50 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப விலை ரூ. 2 கோடி ஆக இருந்தது.ராகுல் சாகர்:
இந்திய அணியின் பவுளர் ராகுல் சாகரை ரூ. 5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப விலை ரூ. 75 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.குல்தீப் யாதவ்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ. 2. கோடிக்கு பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை ஏலம் எடுத்தது.முஸ்தபிர் ரஹ்மான்:
வங்காள தேசம் பந்து வீச்சாளர் முஸ்தபிர் ரஹ்மானை ரூ. 2. கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது. அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.இம்ரான் தாஹீர், அடில் ரஷித், ஆடம் ஜாம்பா ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை
ஷர்துல் தாக்கூர்; 10.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். லக்னோ அணி 7.5 கோடி ரூபாய்க்கு மார்க்வுட்டை ஏலம் எடுத்தது. இந்திய வேகபந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4.2 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணிக்கு சென்றுள்ளார். முஸ்தாஃபிசூர் டெல்லி அணிக்கு சென்றுள்ளார். அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்
ஜோஸ் ஹேசில்வுட்; 7.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பெங்களூரு
லாக்கி பெர்குசன்; 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்
பிரசித் கிருஷ்ணா; ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
தீபக் சாஹர் - 14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ராஜஸ்தான் அணி கடைசிவரை அவரை ஏலம் எடுக்க முயன்றது
தமிழக வீரர் நடராஜனை ஏலம் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது
4 கோடி ரூபாய்க்கு நடராஜனை ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
10.75 கோடிக்கு நிக்கோலஸ் பூரனை ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
பேர்ஸ்டோவ் பஞ்சாப் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் RCB அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை ரூ.6.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை 5.5 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது.ஐபிஎல் ஏலத்தில் இஷான் கிஷன், ₹15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி
ஐபிஎல் மெகா ஏலத்தில் அம்பத்தி ராயுடு, ₹6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி
டெல்லி அணியில் மார்ஷ்
ஆஸ்திரேலியாவின் கொடிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மார்ஷை 6.5 கோடிக்கு டெல்லி வாங்கியது. மறுபுறம், முகமது நபி மற்றும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் விற்கப்படாமல் உள்ளனர்.ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் கிருனால் பாண்டியா, ₹8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி
வாஷிங்டன் சுந்தர்: 8.75 கோடி
ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர், ரூ., 8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிஹசரங்காவை 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி
ஆர்சிபி தனது சொந்த முன்னாள் வீரர் வனிந்து ஹசரங்காவை அதிக தொகைக்கு வாங்கியுள்ளது. ஹஸ்ரங்காவை பெங்களூரு அணி 10.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஹஸ்ரங்காவை வாங்க ஆர்சிபிக்கு பஞ்சாப் மற்றும் ஹைதராபாத்தில் இடையே கடும் போட்டி நிலவியது.சாரு சர்மா புதிய ஏலதாரராக இருப்பார்
ஹக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, தற்போது புதிய ஏலதாரராக சாரு சர்மா முதல் நாள் ஏலத்தை நடத்துவார்.தற்போது மீண்டும் 3.30 மணிக்கு ஏலம் தொடங்கும்.
Hugh Edmeades மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
திடீரென மயங்கி விழுந்த Hugh Edmeades தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏலத்தை நடத்திய ஹக் எட்மீட்ஸ் மயக்கமடைந்தார்
ஐபிஎல் மெகா ஏலத்தின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏலத்தை நடத்திய ஹக் எட்மீட்ஸ் திடீரென மயக்கமடைந்து மேடையில் இருந்து விழுந்தார்.தீபக் ஹூடா லக்னோ அணியில் இணைந்தார்
லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றொரு கொடிய ஆல்ரவுண்டரை தங்கள் அணியில் சேர்த்துள்ளனர். 5.75 கோடிக்கு தீபக் ஹூடாவை லக்னோ வாங்கியது.மீண்டும் பெங்களூர் அணிக்கு தாவிய ஹர்ஷல் பட்டேல்
கடந்த சீசனில் ஆர்சிபிக்காக அற்புதமாக செயல்பட்டு 32 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஹர்ஷல் படேல், இந்த சீசனிலும் ஆர்சிபியால் தனது அணியில் சேர்க்கப்பட்டார். ஹர்ஷல் படேலை 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி. இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடும் போட்டி ஏற்பட்டது.
நிதிஷ் ராணாவை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது கேகேஆர் அணி
இந்திய இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா மீண்டும் கேகேஆர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேகேஆர் நிதிஷ் ராணாவை 8 கோடிக்கு ஏலம் எடுத்தது.CSK அணியில் மீண்டும் பிராவோ
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மீண்டும் மகேந்திர சிங் தோனி அணியால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். 4.40 கோடிக்கு பிராவோவை சிஎஸ்கே வாங்கியது.
விலை போகாத ரெய்னா மற்றும் ஸ்மித்
ஒவ்வொரு முறையும் சிஎஸ்கேவை சாம்பியனாக்கிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் சுற்றில் விலை போகவில்லை. அதே சமயம், ஜாம்பவான் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இதே நிலைதான்.
ஆர்சிபியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வந்தார் தேவ்தத் படிக்கல்
ஆர்சிபிக்காக அற்புதமாக செயல்பட்ட தேவ்தத் படிக்கல், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸால் தங்கள் அணியில் சேர்க்கப்பட்டார். 7.75 கோடிக்கு தேவ்தத் படிக்கலை ராஜஸ்தான் அணி வாங்கியது.இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பாவை 2 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. அதே நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஜேசன் ராயை அதே தொகைக்கு வாங்கியது.
ஹெட்மியர் மீது பெரிய ஏலம்
மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிம்ரோன் ஹெட்மயர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டார். ஹெட்மயர் 8.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டது.
லக்னோ அணியில் மணீஷ் பாண்டே
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த மணீஷ் பாண்டே இந்த முறை லக்னோ அணியில் இணைந்துள்ளார். 4.60 கோடிக்கு மணீஷ் பாண்டேவை லக்னோ வாங்கியது.
மீண்டும் டெல்லி அணியில் வார்னர்
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சாம்பியனாக்கிய வார்னர், டெல்லி அணியில் 6.25 கோடிக்கு விற்கப்பட்டார்.லக்னோவிற்கு குயின்டன் டி காக்கின் முதல் ஏலம்
தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். டி காக் 6.75 இல் லக்னோவால் சேர்க்கப்பட்டார்.
ஆர்சிபியில் முதல் முறையாக ஃபாஃப் டு பிளெசிஸ்
தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் பேட்ஸ்மேனும், பலமுறை சிஎஸ்கே சாம்பியனுமான ஃபாஃப் டு பிளெசிஸ் இந்த ஆண்டு ஆர்சிபியால் வாங்கப்பட்டார். 7 கோடிக்கு ஃபாஃப் டு பிளெசிஸை RCB வாங்கியது.
ஷமி மீது குஜராத் பந்தயம் கட்டுகிறது
ஐபிஎல் 2022 இன் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வீரரை வாங்கியுள்ளது. 6.25 கோடிக்கு மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை குஜராத் அணி வாங்கியது. முன்னதாக ஷமி பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
KKR அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்
இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. ஐயரை 12.25 கோடிக்கு KKR வாங்கியது. இதுவே மிகப் பெரிய ஏலமாகும்.
ராஜஸ்தான் அணியில் இணைந்தார் டிரென்ட் போல்ட்
நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்டை 8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. போல்ட் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
ரபாடா காட்டில் மழை
தென்னாப்பிரிக்காவின் கொடிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இதுவரையிலான நாளின் மிகப்பெரிய ஏலத்தைப் பெற்றுள்ளார். ரபாடாவை பஞ்சாப் கிங்ஸ் அணி 9.25 கோடிக்கு வாங்கியது.அஸ்வின் ராஜஸ்தான் மற்றும் கம்மின்ஸ் KKR இல் இணைந்தார்
அஸ்வினை 5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்த்தது. அதே நேரத்தில், கம்மின்ஸ் மீண்டும் KKR அணியில் இணைந்தார். கம்மின்ஸை 7.25 கோடிக்கு KKR வாங்கியது.தவான் மற்றும் கம்மின்சை எடுத்த அணிகள்!
8.25 கோடிக்கு ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் அணியில் எடுத்து.
பேட் கம்மின்ஸை KKR அணி 7.25 கோடிக்கு தங்கள் அணியில் எடுத்து.
ஷிகர் தவான் பஞ்சாப் அணியில் இணைந்தார்
ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் ஏலம் ஷிகர் தவான் பெயரில் இருந்தது. தவானை 8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. பஞ்சாப் ஏலத்தின் போது டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் கடும் போட்டி நிலவியது.அஸ்வினை கண்டுகொள்ளாத சி.எஸ்.கே
ஐபிஎல் மெகா ஏலத்தில் அஷ்வினின் ஆரம்ப மதிப்பு 2 கோடியாக இருந்தது. அஸ்வினை தங்களது அணியில் எடுக்க டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் 5 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. கடைசி வரை சி.எஸ்.கே அஸ்வின்காக வாய்திறக்கவில்லை.
தற்போது 600 வீரர்கள் ஏலத்தில் களமிறங்க உள்ளனர்
ஐபிஎல் மெகா ஏலத்தில் தற்போது 590 வீரர்களுக்கு பதிலாக 600 வீரர்கள் களமிறங்க உள்ளனர். சமீபத்தில் மேலும் 10 வீரர்கள் ஏலத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த வீரர்களை சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது: ரவீந்திர ஜடேஜா (INR 16 Cr), MS தோனி (INR 12 Cr), மொயின் அலி (INR 8 Cr), ரிதுராஜ் கெய்க்வாட் (INR 6 Cr).
ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த வீரர்கள்
16.25 கோடி - கிறிஸ் மோரிஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ் - 2021)16 கோடி - யுவராஜ் சிங் (டெல்லி டேர்டெவில்ஸ் - 2015)
15.5 கோடி - பாட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 2020)
15 கோடி - கைல் ஜேமிசன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 2021)
14.5 கோடி - பென் ஸ்டோக்ஸ் (ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் - 2017)
14.25 கோடி - கிளென் மேக்ஸ்வெல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 2021)
14 கோடி - யுவராஜ் சிங் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 2014)
இன்று 106 வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளனர்
ஏலத்தின் முதல் நாளான இன்று, குறைந்தது 97 வீரர்களை ஏலம் எடுப்பார்கள். நேரம் இருந்தால் 106 வீரர்கள் வரை எடுக்கப்படலாம். இந்த முறை ஏலத்தின் பொறுப்பு ஹக் எட்மண்ட்ஸிடம் உள்ளது.
மதியம் 12 மணிக்கு ஏலம் தொடங்கும்
ஐபிஎல் 2022 மெகா ஏலம் இப்போது மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக காலை 11 மணிக்கு ஏலம் தொடங்குவதாக இருந்த நிலையில், தற்போது 1 மணி நேரம் தாமதமாக ஏலம் தொடங்கும் என செய்திகள் வெளியாகின.
இந்த வீரர்களுக்கு அதிக டிமாண்ட்
இன்று, ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, குயின்டன் டி காக், பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, டிரென்ட் போல்ட், டேவிட் வார்னர் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோருக்கு அணிகள் ஏலத்தில் பெரும் பணம் வைக்கலாம். இந்த வீரர்கள் போட்டியின் வரைபடத்தை தாங்களாகவே மாற்றுவது தெரிந்ததே. இந்த வீரர்களை ஏலத்தில் வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படலாம்.