IPL 2025 Mega Auction Live Update: ஏலத்தில் சிஎஸ்கே எடுத்துள்ள வீரர்கள்! யார் யார் தெரியுமா?
IPL 2025 Mega Auction Live Updates: ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.
IPL 2025 Mega Auction Live Updates: சௌதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டா நகரில் செங்கடல் கடற்கரையோரமாக அமைந்துள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் (Abadi Al Johar Arena) இன்றும் (நவ.24), நாளையும் (நவ. 25) ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெறுகிறது.
ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளும் இன்று ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை தூக்க பல கோடிகளுடன், சில RTM கார்டுகளுடன் காத்திருக்கின்றன.
அந்த வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு (Zee News Tamil) உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.
Latest Updates
- சமீர் ரிஸ்வியை தவறவிட்ட சிஎஸ்கேகடந்த முறை சென்னை அணியில் இருந்த சமீர் ரிஸ்வி இந்த முறை டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். 95 லட்சத்திற்கு டெல்லி ஏலத்தில் எடுத்துள்ளது.
- 10 கோடிக்கு நூர் அகமதை எடுத்த சிஎஸ்கே!ஐபிஎல் ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதை 10 கோடிக்கு ஏலத்தில் எடுத்து சென்னை அணி
- தீக்ஷனாவை எடுத்த ராஜஸ்தான்!4.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தீக்ஷனாவை தங்கள் அணியில் எடுத்துள்ளது.
- ட்ரெண்ட் போல்டை எடுத்த மும்பை!ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி 12.50 கோடிக்கு நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்டை எடுத்துள்ளது.
- கலீல் அகமதை எடுத்த சென்னை அணி!ஐபிஎல் ஏலத்தில் கலீல் அகமதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
- 12 கோடிக்கு முக்கிய வீரரை எடுத்த ஆர்சிபி!ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை 12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது ஆர்சிபி
- பில் சால்ட்டை ஏலத்தில் எடுத்த ஆர்சிபி!இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டை 11.50 கோடி தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் அணி!
சிஎஸ்கே அணியில் அஸ்வின்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். 9.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே
- ரச்சினை அணியில் எடுத்து சிஎஸ்கே!நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை மீண்டும் தங்கள் அணியில் எடுத்தது சென்னை அணி!
- டேவான் கான்வேயை தட்டி தூக்கிய சென்னை!ஐபிஎல் ஏலத்தில் டேவான் கான்வேவை சென்னை சூப்பர் கிங்ஸ் 6.25 கோடிக்கு தட்டி தூக்கி உள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைக்கு தயாரா.. அரசு வேலையை தட்டித்தூக்கும் நேரம் வந்தாச்சு!!
- அடுத்த செட்டில் வரவுள்ள வீரர்கள்!டேவிட் வார்னர்ஹாரி புரூக்ராகுல் திரிபாதிடெவோன் கான்வேஐடன் மார்க்ராம்தேவ்தட் படிக்கல்ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்
- அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்!அர்ஷ்தீப் சிங் - பிபிகேஎஸ் - ரூ 18 கோடி (ஆர்டிஎம்)ககிசோ ரபாடா - ஜிடி - ரூ.10.75 கோடிஷ்ரேயாஸ் ஐயர் - பிபிகேஎஸ் - ரூ 26.75 கோடிஜோஸ் பட்லர் - ஜிடி - ரூ.15.75 கோடிமிட்செல் ஸ்டார்க் - டிசி - ரூ.11.75 கோடிரிஷப் பண்ட் - எல்எஸ்ஜி - 27 கோடிகேஎல் ராகுல் - டிசி - ரூ.14 கோடிமுகமது சிராஜ் - ஜிடி - 12.25 கோடிடேவிட் மில்லர் - எல்எஸ்ஜி - ரூ.7.50 கோடியுஸ்வேந்திர சாஹல் - பிபிகேஎஸ் - ரூ 18 கோடிலியாம் லிவிங்ஸ்டோன் - ஆர்சிபி - ரூ 8.75 கோடிமுகமது ஷமி- எஸ்ஆர்எச் - ரூ 10 கோடி
- 14 கோடிக்கு ஏலம் போன கேஎல் ராகுல்ஐபிஎல் மெகா ஏலத்தில் கேஎல் ராகுலை டெல்லி அணி 14 கோடியில் தங்கள் அணியில் எடுத்துள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் டெல்லி முந்தி உள்ளது.
- அதிக விலைக்கு ஏலம் போன சஹால்!பஞ்சாப் அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹலை ரூ. 18 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முகமது ஷமி!ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 கோடிக்கு ஷமியை ஏலத்தில் எடுத்தது.
முதல் மார்கியூ செட்டில் ஏலம் போன வீரர்கள்!
அர்ஷ்தீப் சிங் - பிபிகேஎஸ் - ரூ 18 கோடி (ஆர்டிஎம்)
ககிசோ ரபாடா - ஜிடி - ரூ.10.75 கோடி
ஷ்ரேயாஸ் ஐயர் - பிபிகேஎஸ் - ரூ 26.75 கோடி
ஜோஸ் பட்லர் - ஜிடி - ரூ.15.75 கோடி
மிட்செல் ஸ்டார்க் - டிசி - ரூ.11.75 கோடி
ரிஷப் பண்ட் - எல்எஸ்ஜி - ரூ. 27 கோடி
சிஎஸ்கே அணி சைலண்ட்
முதல் செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த பிளேயரையும் ஏலம் எடுக்கவில்லை
இன்றும் உங்களை உக்கப்படுத்தும் விவேகானந்தரின் பொன்மொழிகள்!
ஐபிஎல் ஏலம் 2024 முதல் செட் நிறைவு
ஐபிஎல் முதல் செட் ஏலத்தில் அதிகபட்சமாக 27 கோடிக்கு ரிஷப் பந்த் ஏலம் போனார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது. 20 கோடியில் ரிஷப் இருந்தபோது 27 கோடிக்கு தட்டி தூக்கியது அந்த அணி
- 27 கோடிக்கு ஏலம் போன பந்த்!ஐபிஎல் ஏலத்தில் பந்த் 27 கோடிக்கு ஏலம் போய் உள்ளார். லக்னோ அணி அவரை தங்கள் அணியில் எடுத்துள்ளது.
- 11.75 கோடிக்கு ஏலம் போன ஸ்டார்க்!டெல்லி அணி மிட்சல் ஸ்டார்க்கை 11.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
- ஷ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!ஐபிஎல் வரலாற்றில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக மாறி உள்ளார். பஞ்சாப் அணி 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
குஜராத் அணியில் ரபாடா
காகிசோ ரபாடாவை 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அவருக்கு ஆர்டிஎம் முறையை பயன்படுத்தவில்லை என பஞ்சாப் அணி தெரிவித்துவிட்டது.
ஞாயிறு சந்தை லீவு..தங்கம்,வெள்ளி விலைக்கும் இன்னைக்கு லீவுப்பா!! இன்றைய விலை நிலவரம்!
பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங்
பஞ்சாப் கிங்ஸ் அணி 18 கோடி ரூபாய்க்கு அர்ஷ்தீப் சிங்கை ஏலம் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தபோதும் ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி பஞ்சாப் அணி அர்ஷ்தீப்பை வாங்கியது.
பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே விற்பனை இன்று தொடங்குகிறது..கவனிக்க வேண்டிய சலுகைகள்! பொன்னான ஆஃபரை பெற ரெடியா..
- RTM பயன்படுத்திய பஞ்சாப்!இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங்கை 18 கோடிக்கு RTM மூலம் ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.
மாதவிடாய் நேரத்தில் இந்த யோகா செய்தால் உங்கள் வலி பரந்தோடும்!!
வயதான காலத்தில் வாழ்க்கையில் கம்பீரமாக இருக்கும் 4 ராசிக்காரர்கள்!!
அர்ஷ்தீப் சிங் ஏலம் எடுக்க போட்டி
அர்ஷ்தீப் சிங்கை ஏலம் எடுக்க சென்னை, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ்
அர்ஷ்தீப் சிங்கை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
- தொடங்கியது ஐபிஎல் மெகா ஏலம்!மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் தற்போது தொடங்கி உள்ளது. இன்று 12 செட்களுக்கு ஏலம் நடைபெறுகிறது.
ஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள்
2008: எம்.எஸ். தோனி, 1.5 மில்லியன் டாலர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது
2009: ஆண்ட்ரூ பிளின்டாஃப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கெவின் பீட்டர்சனை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் $1.55 மில்லியன் ல்டலருக்கு ஏலத்தில் எடுத்தது
2010: ஷேன் பாண்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், கீரன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
2011: கௌதம் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு $2.4 மில்லியனுக்கு விற்கப்பட்டார்
2012: ரவீந்திர ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு $2 மில்லியனுக்கு விற்கப்பட்டார்
2013: க்ளென் மேக்ஸ்வெல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு $1 மில்லியனுக்கு விற்கப்பட்டார்
2014: யுவராஜ் சிங், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 14 கோடிக்கு விற்கப்பட்டார்
2015: யுவராஜ் சிங், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 16 கோடிக்கு விற்கப்பட்டார்
2016: ஷேன் வாட்சன், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 9.5 கோடிக்கு விற்கப்பட்டார்.
2017: பென் ஸ்டோக்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்டிற்கு 14.5 கோடிக்கு விற்கப்பட்டார்
2018: பென் ஸ்டோக்ஸ், 12.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு விற்கப்பட்டார்
2019: ஜெய்தேவ் உனட்கட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், வருண் சக்ரவர்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் 8.4 கோடிக்கு விற்கப்பட்டனர்.
2020: பேட் கம்மின்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 15.5 கோடிக்கு விற்கப்பட்டார்
2021: கிறிஸ் மோரிஸ், 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு விற்கப்பட்டார்
2022: இஷான் கிஷன், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 15.25 கோடிக்கு விற்கப்பட்டார்
2023: சாம் குர்ரன், பஞ்சாப் கிங்ஸுக்கு 18.5 கோடிக்கு விற்கப்பட்டார்
2024: மிட்செல் ஸ்டார்க், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 24.75 கோடிக்கு விற்கப்பட்டார்ஐபிஎல் 2025 ஏலம்: ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை எடுக்கலாம்?
ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சம் 25 வீரர்களையும் வைத்து அணியை அமைக்கலாம். மொத்தம் 577 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்தே 204 வீரர்களை அணிகள் எடுக்க வேண்டும்.
IPL 2025 Mega Auction Live Update: ஏலத்திற்கு முன் 10 அணிகள் - ஒரு பார்வை
ஐபிஎல் 2025 ஏலம்: கையிருப்பு தொகை எவ்வளவு?
மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் என மொத்த அணிகளின் கையிருப்பு கூட்டுத்தொகை ரூ.641.5 கோடியாகும்.
ஐபிஎல் மெகா ஏலம் எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் மெகா ஏலம், இரவு 10.30 மணிவரை நீடிக்கும்.
ஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1. ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 18 கோடி)
2. ரவீந்திர ஜடேஜா (ரூ 18 கோடி)
3. மதீஷ பத்திரன (ரூ 13 கோடி)
4. சிவம் துபே (ரூ 12 கோடி)
5. எம்எஸ் தோனி (ரூ 4 கோடி)ஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1. விராட் கோலி – 21 கோடி
2. ரஜத் படிதார் - ரூ 11 கோடி
3. யாஷ் தயாள் - ரூ 5 கோடிஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1. ஹென்ரிச் கிளாசென் (ரூ. 23 கோடி)
2. பாட் கம்மின்ஸ் (ரூ 18 கோடி)
3. அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி)
4. டிராவிஸ் ஹெட் (ரூ 14 கோடி)
5. நிதிஷ் குமார் ரெட்டி (ரூ 6 கோடி)ஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1. அக்சர் படேல் (ரூ 16.50 கோடி)
2. குல்தீப் யாதவ் (ரூ 13.25 கோடி)
3. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி)
4. அபிஷேக் போரல் (ரூ 4 கோடி)ஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்கவைத்துள்ள வீரர்கள்
1. ரிங்கு சிங் (ரூ. 13 கோடி)
2. வருண் சக்ரவர்த்தி (ரூ 12 கோடி)
3. சுனில் நரைன் (ரூ 12 கோடி)
4. ஆண்ட்ரே ரசல் (ரூ. 12 கோடி)
5. ஹர்ஷித் ராணா (ரூ 4 கோடி)
6. ரமன்தீப் சிங் (ரூ 4 கோடி)ஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி)
2. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ 18 கோடி)
3. ரியான் பராக் (ரூ 14 கோடி)
4. துருவ் ஜூரல் (ரூ. 14 கோடி)
5. ஷிம்ரோன் ஹெட்மியர் (ரூ 11 கோடி)
6. சந்தீப் சர்மா (ரூ 4 கோடி)ஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: குஜராத் டைட்டன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1. ரஷித் கான் (ரூ 18 கோடி)
2. ஷுப்மான் கில் (ரூ 16.50 கோடி)
3. சாய் சுதர்சன் (ரூ 8.50 கோடி)
4. ராகுல் தெவாடியா (ரூ 4 கோடி)
5. ஷாருக் கான் (ரூ 4 கோடி)ஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1. நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி)
2. ரவி பிஷ்னோய் (ரூ 11 கோடி)
3. மயங்க் யாதவ் (ரூ 11 கோடி)
4. மொஹ்சின் கான் (ரூ 4 கோடி)
5. ஆயுஷ் படோனி (ரூ 4 கோடி)ஐபிஎல் ஏலம் 2025, முதல் நாள்: பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1. ஷஷாங்க் சிங் (ரூ 5.5 கோடி)
2. பிரப்சிம்ரன் சிங் (ரூ 4 கோடி)IPL 2025 Mega Auction Live Update: முக்கிய 12 வீரர்கள்
Marquee Set 1: ஜாஸ் பட்லர், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க்
Marquee Set 2: கேஎல் ராகுல், யுஸ்வேந்திர சஹால், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், முகமது சிராஜ், முகமது ஷமி
வியூகங்களுடன் ஐபிஎல் அணிகள்
ஜெட்ட நகரில் சிஎஸ்கே நிர்வாகிகள்
ஆர்சிபி கொடுத்த அப்டேட்
IPL 2025 Mega Auction: 10 அணிகளின் ஏலத்தொகை கையிருப்பு, RTM கையிருப்பு
பஞ்சாப் கிங்ஸ் - ரூ.110.5 கோடி - 4 RTM
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.83 கோடி - 3 RTM
டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ.73 கோடி - 2 RTM
குஜராத் டைட்டன்ஸ் - ரூ.69 கோடி - 1 RTM
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரூ.69 கோடி - 1 RTM
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.55 கோடி - 1 RTM
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.51 கோடி - RTM கிடையாது
மும்பை இந்தியன்ஸ் - ரூ.45 கோடி - 1 RTM (Uncapped)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ.45 கோடி - 1 RTM (Uncapped)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.41 கோடி - RTM கிடையாது