LIVE WI vs ENG: 212 ரன்னுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல்-அவுட்
இன்று நடைபெற உள்ள 19வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.
18:30 14-06-2019
இன்று நடைபெற்று வரும் 19 வது லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 63(78) ரன்கள் அடுத்தார்.
இங்கிலாந்து அணி வெற்றி பெற 213 ரன்கள் தேவை.
17:51 14-06-2019
36.1 ஓவரில் ஆறாவது விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.
17:28 14-06-2019
156 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறும் மேற்கு இந்திய தீவுகள் அணி.
16:06 14-06-2019
மூன்றாவது விக்கெட்டை இழந்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. ஷாய் ஹோப் 11(30)ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை மார்க் வுட் கைப்பற்றினார்.
16:04 14-06-2019
இரண்டாவது விக்கெட்டை இழந்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. கிறிஸ் கெய்ல் 36(41) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை லியாம் பிளன்கெட் கைப்பற்றினார்.
15:47 14-06-2019
மேற்கு இந்திய தீவுகள் அணிகள் 10 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.
கிறிஸ் கெய்ல்* 33(29)
ஷாய் ஹோப்* 4(23)
15:16 14-06-2019
முதல் விக்கெட்டை இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி. தொடக்க வீரரான எவின் லீவிஸ் 2(8) ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். இந்த விக்கெட்டை இங்கிலாந்து வேக பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கைப்பற்றினார்.
14:58 14-06-2019
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணிகள் பேட்டிங் செய்ய உள்ளது.
டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 19வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும். இந்த சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும்.
இதுவரை மொத்தம் 18 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. இன்று நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் பங்கேற்று இரண்டு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் பெற்று அட்டவணையில் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் வெஸ்ட்இண்டீசை அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும், மற்றொரு போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால், ஒரு புள்ளி கிடைத்தது. ஆகா 3 புள்ளிகளுடன் அட்டவணையில் 6வது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியின் வெஸ்ட்இண்டீசை அணி வெற்றி பெற்றால் 3வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு அதிகம். அதேபோல இங்கிலாந்து வெற்றி பெற்றால் 2வது இடத்திற்கு முன்னேறும்.
வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், ரஸ்செல், நிகோலஸ் பூரன், பிராத்வெய்ட், ஷாய் ஹோப் போன்ற வீரர்கள் அதிரடியாக ஆடி அணிக்கு நல்ல ரன்-ரேட்டை கொடுக்கக்கூடியவர்கள். அதேபோல பந்து வீச்சில் ஒஷானே தாமஸ், காட்ரெல், ரஸ்செல் நல்ல நிலையில் உள்ளனர்.
இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், ஜோரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதேபோல பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், பிளங்கெட் ஆகியோரின் பந்து வீச்சு மிரட்டலாக உள்ளது.
இரு அணிகளிலும் அதிரடி பேட்ஸ்மேன்களும், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இருப்பதால், இன்றை ஆட்டத்தில் அதிரடிக்கும் பரபரப்புக்கும் குறைவு இருக்காது என்றே தோன்றுகிறது.
இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
வெஸ்ட்இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், ஆந்த்ரே ரஸ்செல், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்.
இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் அல்லது மொயீன் அலி, மார்க்வுட்.