சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணிகளுக்கு இணையிலான போட்டி மும்பை பிராபேர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரண்டாவது பேட்டிங்கின்போது பனி அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்திருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் வெளுத்து வாங்கியது. ரூதுராஜ் கெய்க்வாட் மட்டும் ஒரு ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாக, மறு முனையில் ராபின் உத்தப்பா அடி வெளுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கொல்கத்தா அணியை அலறவிட்ட ஆர்சிபி அணியின் இளம் வீரர் ஷபாஸ் அகமது யார்?


இதனால், 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த அவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். ஒன்டவுன் இறங்கிய மொயீன் அலியும் அதிரடியாக விளையாடினார். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்து  ஆவேஷ் பந்தில் போல்டானார். இந்த முறை சென்னை அணிக்கு புதியதாக வந்துள்ள சிவம் துபே, முதன்முறையாக தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். 30 பந்துகளை எதிர்கொண்ட சிவம் துபே, 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 



ராயடு 27 ரன்கள் விளாச, கடைசியில் களமிறங்கிய தோனி மற்றும் ஜடேஜாவும் தங்கள் பங்குக்கு அதிரடியாக விளையாடினர். குறிப்பாக, தோனி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் விளாசி அமர்களப்படுத்தினார். 6 பந்துகளை எதிர்கொண்ட தோனி 16 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 7விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி, 210 ரன்களை குவித்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில், கே.எல் ராகுல் மற்றும் டிகாக் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். 



முதலில் நிதானமான ஆடினாலும் இரண்டு ஓவர்களுக்குப் பிறகு சரவெடியாய் வெடிக்கத் தொடங்கினர். இவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் சென்னை அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், டிகாக் மற்றும் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளையும் சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து கோட்டை விட்டனர். இதனால், ராகுல் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் டிகாக் 45 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 


மேலும் படிக்க | லக்னோ அணியை வீழ்த்த CSK அணிக்குள் என்டிரியாகும் புதிய வீரர் - தோனியின் மாஸ் பிளான்


 பின்வரிசையில் களமிறங்கிய எவின் லீவிஸ் சென்னை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். கடைசி 2 ஓவர் பரபரப்பாக இருந்தது. 19வது ஓவரை வீசிய சிவம் துபே ஓவரை வெளுத்து வாங்கிய எவின் லீவீஸ் மற்றும் பதோனி ஆகியோர் 25 ரன்களை சேர்த்தனர். முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. 



 


கடைசி வரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்த எவின் லீவிஸ் 23 பந்துகளில் 55 ரன்கள் சேர்தார். இளம் வீரர் பதோனி 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர்களை விளாசினார்.  இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சந்திக்கும் 2வது தொடர் தோல்வியாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR