ஐபிஎல்-லில் வரலாறு படைத்த லக்னோ - வெளியேறியது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியில் வரலாற்று ரெக்கார்டுடன் கொல்கத்தா அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது.
மும்பை டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் கொல்கத்தா அணி களமிறங்கியது. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, கே.எல்.ராகுலும், குயின்டன் டிகாக்கும் களமிறங்கினர். தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், போகப்போக சரவெடியாக வெடித்தனர்.
மேலும் படிக்க | IPL: பிளே ஆஃப்-ஐ ஒரு ரூபாய்கூட செலவில்லாமல் இலவசமாக பாருங்கள்
குயின்டன் டிகாக் 12 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை கொல்கத்தா அணி கோட்டை விட்டதால், அந்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். இதனால், கடைசி வரை லக்னோ அணி விக்கெட்டை பறிகொடுக்கவே இல்லை. கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் ஆகியோர் இருமுனைகளிலும் அதிரடியாக வெளுத்து வாங்கினர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முயற்சித்த பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டனர் இருவரும். இதனால், அந்த அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் இழக்காமல் 210 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஜோடி விக்கெட் இழக்காமல் 210 ரன்கள் எடுப்பது இதுவே முதன்முறையாகும்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டிகாக் 70 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கேப்டன் ராகுல் 68 ரன்கள் விளாசினார். டிகாக் 10 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். ராகுல் தன் பங்கிற்கு 4 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தோமரும் அவுட்டாக நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 59 ரன்கள் குவிக்க, சாம்பில்லிங்ஸ் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் அவுட்டானாலும், ரிங்கு சிங் மற்றும் நரைன் ஆகியோர் லக்னோ அணிக்கு பயம் காட்டினர். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 21 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாச, 3 பந்துகளில் 5 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அடுத்த பந்தில் அவர் அவுட்டானார். 15 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார் ரிங்கு சிங். முடிவில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
மேலும் படிக்க | பேரு மாலிக்! ரெக்கார்ட என் பேருல எழுதுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR