இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒருநாள் போட்டி நேற்று சென்சூரியன் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில்  முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 32.2 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 


நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


முன்னதாக நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவர்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணியின் இன்னிங்ஸ் 40 நிமிடங்கள் இடைவேளை இல்லாமல் சற்று நேரத்திலேயே தொடங்கியது. 


இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் இந்தியவுக்கு வெற்றி பெற 2 ரன்களே தேவையாக இருந்த நிலையில் நடுவர்கள் (Umpires) இரு அணிக்கு உணவு இடைவேளையை அறிவித்தார். இதனால், வீரர்கள் சற்று விருப்பமில்லாமலே டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். 40 நிமிட உணவு இடைவேளைக்கு பின் களமிறங்கினர் இந்திய அணி 2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.