மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது!!
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூசன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2017-ம் ஆண்டிற்கான பத்ம பத்ம பூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.