புதுடெல்லி: நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து தோனி தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி அடைந்த வீரர்களில் ஒரு மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி கிரிக்கெட் உலகின் உச்சத்தை அடைந்தது. இவரது தலைமையில் தான் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான உலகக்கோப்பைகளான 50 ஓவர், 20 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை இந்திய அணி வென்றது. ஐசிசி அமைப்பின் மூன்று கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் மகேந்திர சிங் தோனி சாரும். கிரிக்கெட் உலகில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். 


இத்தகைய சாதனைகளை செய்த மகேந்திர சிங் தோனி எப்பொழுது கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற விவாதம் ஒருபக்கம் நடந்து வந்தாலும், அதற்கு பதிலடி தரும் வகையில் பல போட்டிகளில் கடைசி நேரத்தில் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாட்டி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளார்.


தற்போது 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சார்பாக விளையாடி வருகிறார். இது இவரின் கடைசி உலகக்கோப்பை தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. 


இந்தநிலையில், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியுடன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுப்போவதா தகவல் வெளியாகியுள்ளது. 


இதுகுறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் தோனி தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.