IPL 2019: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி அபார வெற்றி!
IPL 2019 தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IPL 2019 தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கோட் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூரு அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. பெங்களூரு அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கோலி 8(9) ரன்களில் வெளியேற, 28(20) ரன்களுடன் பார்திவ் பட்டேலும் வெளியேறினார். இவர்களை அடுத்து ஜோடி சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் 75(51) மற்றும் மோயின் அலி 50(32) அரிரடியாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர்.
எனினும் பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. மும்பை அணியின் லத்திஷ் மலிங்கா 4 விக்கெட் குவித்தார். இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
மும்பை அணி வீரர்கள் ஆரம்பம் முதலே நிதாணமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீறான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அணியில் அதிகப்பட்சமாக குவிண்டன் டி காக் 40(26) ரன்கள் குவித்தார். மும்பை அணியின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தனர். இதனையடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 10 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை அணி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.