புது டெல்லி: இன்று (சனிக்கிழமை) டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதிப் போட்டியில் மேரி கோம் (Mary Kom), தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீனை தோற்கடித்து ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆறு முறை உலக சாம்பியனான மேரிகோம் 9-1 என்ற கணக்கில் நிகாத் ஜரீனை தோற்கடித்தார்.


51 கிலோ பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் மேரி கோம் தனது எதிராளியான ரிது க்ரூவலை தோற்கடித்தார், அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த போட்டியில் தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன் மற்றும் தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை தோற்கடித்தார்.


பெண்கள் குத்துச்சண்டை வீராங்கனைக்கான ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த போட்டிகள் இன்றுன் முடிவடைய உள்ளது. அதே நேரத்தில் ஆண்களுக்கான ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான போட்டிகள் டிசம்பர் 29 முதல் 30 வரை நடைபெற உள்ளது.


ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சீனாவில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.