இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 16-வது லீக் ஆட்டம், தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கைவிடப்பட்டது. ஆனாலும் புள்ளி பட்டியலில் முன்னேறிய வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஷ்ரஃப் மோர்தசா தலைமையிலனா வங்காளதேச அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இரண்டு புள்ளிகளுடன் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் 8_வது இடத்தில் இருந்தது. அதேபோல இலங்கை அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றியும் (DLS), பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டதால், இரண்டு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. மற்றொரு போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் மூன்று புள்ளிகளுடன் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் 6_வது இடத்தில் இருந்தது. 


இந்தநிலையில், இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக இருந்த நிலையில், மாலை 3 மணிக்கு பிரிஸ்டலில் நடக்கவிருந்த போட்டி  மழையின் காரணமாக தடை பெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் கூட போடவில்லை.


மழையின் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால், இரண்டு அணிக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் இலங்கை அணி நான்கு ஆட்டங்களில் 4 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேபோல வங்காளதேசம் நான்கு ஆட்டங்களில் 3 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளும் ஒரு இடம் முன்னேறி உள்ளது.