புதுடெல்லி: பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2017-ம் ஆண்டுக்கான ஹாங்காங் டி-20 பிளிட்ஜ் போட்டித்தொடர் நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டித் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி ஒரு புதிய சாதனை ஒன்று அசத்தியுள்ளார்.


இப்போட்டியின் இம்ரான் ஆரிப் வீசிய 19-வது ஓவரின் கடைசி 2 பந்துகளிலும், 20 வது ஓவரை வீசிய ஆஸ்லி கேடியின் முதல் 4 பந்துகளிலும் சிக்ஸர் விளாசி தொடர்ந்து 6 பந்துகளில் சிக்ஸர் விளாசிய வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றார்.


இந்த போட்டியில் 37 பந்துகளில் 82 ரன்களை குவித்து அசத்தினார். 42 வயதில் இந்த சாதனை படைத்து சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை மிஸ்பா நிரூபித்துள்ளார்.



முன்னதாக இந்தியாவின் யுவராஜ் சிங் 2007-ம் ஆண்டு நடைப்பெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவர் பிராட் பந்தில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார்.