ஐபிஎல் 2024ல் பெஞ்ச் செய்யப்பட்டு இருக்கும் முக்கியமான 4 வீரர்கள்!
IPL 2024: ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பல வரலாற்று சாதனைகள் நிகழந்துள்ளது. பல இளம் வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து காட்டியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் எதிரணிகளுக்கு பயத்தை கொடுத்து வருகின்றனர். ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. அதே சமயம் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி போன்ற அணிகள் புள்ளிபட்டியலில் கீழே உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியும், அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்து இருந்த நிலையில், கேகேஆர் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் 20 முதல் 25 வீரர்கள் இருந்தாலும், 12 வீரர்கள் மட்டுமே ஒரு போட்டியில் விளையாட முடியும். இதனால் அணியின் காம்பினேஷன், மைதானம் மற்றும் வீரரின் பார்ம் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக சில ஸ்டார் பிளேயர்கள் கூட அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளனர். பல ரசிகர்கள் இவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று சமுக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் 2024ல் பெஞ்ச் செய்யப்பட்ட நான்கு கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
ஷாருக் கான்
தமிழக வீரர் ஷாருக் கான் இன்னும் ஐபிஎல் 2024ல் ஒரு போட்டியில் விளையாடவில்லை. பல போட்டிகளை தனி ஆளாக முடித்து கொடுத்துள்ள ஷாருக் கான் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்ததால் ஷாருக் கானிற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றுள்ளதால், ஷாருக் கானிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
லாக்கி பெர்குசன்
ஐபிஎல் 2024ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சால் பலரை திணறடித்துள்ள லாக்கி பெர்குசனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடிப்படை விலையில் ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஆர்சிபி அணி நிர்வாகம் லாக்கி பெர்குசனை விட அல்சாரி ஜோசப் மற்றும் ரீஸ் டாப்லியை அணியில் எடுத்து விளையாடி வருகிறது.
அமித் மிஸ்ரா
ஐபிஎல்லில் நிறைய சாதனைகளை வைத்துள்ள மூத்த லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா 2023 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இருப்பினும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல்லில் அவருக்கு இன்னும் விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் சீனியர் பவுலர் பெஞ்ச் செய்யப்பட்டு உள்ளார்.
மொயீன் அலி
ஐபிஎல்லில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் மொயின் அலி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த வீரர்களில் ஒருவராக மெயின் அலி இருந்து வருகிறார். சென்னை அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரன் மற்றும் டேரில் மிட்செல் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளதால் அலிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசினாலும், பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ