நடந்து முடிந்த ஐபிஎல் 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. முதல்முறையாக ஐபிஎல்லில் களமிறங்கிய குஜராத் வென்றது பலருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியது. அதேசமயம்,குஜராத் கோப்பை வென்றதற்கு ஹரிதிக் பாண்டியாவின் கேப்டன்சிக்கு பெரும் பங்கு இருப்பதாக முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் முதல்முறையாக பெரிய தொடரில் அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற பாண்டிய எந்தவித பதற்றமுமின்றி சிறப்பாக செயல்பட்ட பாண்டிய இந்திய அணியை எதிர்காலத்தில் சிறப்பாக வழிநடத்துவார் என்றும் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



கேப்டனாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் பாண்டிய இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இறுதிப்போட்டியில்கூட அச்சுறுத்திக்கொண்டிருந்த ஜோஸ் பட்லரை பாண்டியாவே வெளியேற்றியிருந்தார். பாண்டியா இந்த்  சீசனில் மட்டும் 487 ரன்களையும், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


காயத்திலிருந்து மீண்ட பாண்டிய பழைய ஃபார்மில் இருப்பாரா என கேள்வி எழுப்பியவர்களுக்கு தனது பெர்பார்மன்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் பாண்டியா.


இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின், “பாண்டியாவுக்கு பந்துவீசும் திறமை இருக்கிறது. இந்திய அணிக்கு பல போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். ஆனால் காயம் காரணமாக பல போட்டிகளில் அவர் ஆடவில்லை.



இப்போது காயத்திலிருந்து பாண்டியா திரும்பிவந்துள்ளார். 20 ஓவர் போட்டியில் 4 ஓவர்கள் வரை வீசுகிறார். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி வைத்துப் பார்த்தால் அவரால் எத்தனை போட்டிகளுக்கு 4 ஓவர்களை வீச முடியும். ஆல்ரவுண்டராக இருக்கும் பாண்டியா நிச்சயமாக பந்துவீச வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.


மேலும் படிக்க | ஒருநாள், டி20 போட்டிகளில் முதல் இடத்தை பிடித்த பாகிஸ்தான் வீரர்!


ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு ஆட்டத்தையே மாற்றிவிட்டது. 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாண்டியா சிறப்பாகப் பந்துவீசினார். பேட்டிங்கிலும் விரைவாக 34 ரன்கள் சேர்த்தார். அவர் சிறந்த வீரராக விளங்கி வருகிறார். தொடர்ந்து அவர் அதை செய்யவேண்டும், அதற்கு உடல்தகுதி வேண்டும்” என்றார்.


முன்னதாக,  இந்திய அணிக்கு புதிய கேப்டன் வேண்டுமென்றால் ஹர்திக் பாண்டியா இருக்கிறார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். அவரைப்போலவே


இந்தியாவின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சேவாக் உள்ளிட்டோரும் ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe